கொரோனாவைரசு சம்மந்தமான விளக்கங்கள் – கேள்வி பதில்

புதிய கொரோனா வைரசு வயதானவர்களை மட்டுமே பாதிக்கின்றதா அல்லது இளையோர்களையும் பாதிக்கின்றதா?
 
இது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. வயதானவர்களை மட்டுமல்லாமல் இதற்கு முன் வேறு நோய்களுக்கு உள்ளானவர்கள் (ஆஸ்மா, இருதய நோய் போன்றவை) அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்றுகின்றனர். கை மற்றும் சுவாசக் குழாய் போன்றவற்றை மிகவும் சுகாதாரமாக கவனித்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தும்மல், இருமல் வரும் பொழுது ஒரு முறை பாவித்து எறியும் பேப்பர்கள் (fazzoletti) பாவிக்கவும். பாவித்து மூடிய கழிவுக் கூடையில் உடன் போட்டு அதனை மூடி விடவும்.

கொரோனா வைரசு என்றால் என்ன?
 
கொரோனா வைரசுகள் என்பது வைரசுகளின் ஒரு பெரிய குடும்பமாகும். இது தடிமன் முதல் கடுமையான சுவாச நோய்களை (SARS) ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. புதிய கொரோனா வைரசு என்பது சீனாவின் “வுஹான்” நகரில் முதலில் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரசு ஆகும்.
 

சீனா அல்லது வைரசு அடையாளம் காணப்பட்ட பிற நாடுகளிலிருந்து  தபால்கள் பெறுவது பாதுகாப்பானதா?
 
ஆம், அது பாதுகாப்பானது. பார்சல்களைப் பெறுபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரசு நீண்ட காலமாக பொருட்களின் மேற்பரப்பில் வாழ முடியாது.

 
எப்பொழுது சுவாசத் தடுப்பு உறை (Mask) அணிய வேண்டும்?

  1. உங்களுக்கு சுவாச நோய் அறிகுறிகள் இருந்தால், அதாவது இருமல் மற்றும் சுவாச சிரமங்கள் இருக்கும் பொழுது
     
  2. நீங்கள் சுவாச நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உதவும் பொழுது
     
  3. நீங்கள் சுவாச நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு சுகாதர பணியாளர் என்றால்

சுவாச நோய் அறிகுறிகள் இல்லாத பொதுவான மக்களுக்கு தேவையில்லை.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?
கடைசி 14 நாட்களுல் சீனாவிற்கு சென்று வந்திருந்தால் அல்லது Covid-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கியத் தொடர்பு ஏற்பட்டிருந்தால் 1500 எனும் இலவச இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். வீட்டில் இருக்கவும், ஒரு முறை பாவித்து எறியும் பேப்பர்கள் (fazzoletti) உபயோகிக்கவும், கைகளை அடிக்கடி கழுவவும் மற்றும் மஸ்க் அணியவும்.

எங்களுடைய வீட்டுப் பிராணிகள் கொரோனா வைரசை பரப்பலாமா?
பிராணிகளுக்கு இக் கொரோனா வைரசு பரவும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் உங்கள் வீட்டுப் பிராணிகளைத் தொட்டு விட்டு நன்றாக கைகளை சவுக்காரமுடன் கழுவவும். இது எவ்வித கிருமிகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

கொரோனா வைரசின் அறிகுறிகள் எவை?
வெவ்வேறு சுவாச நோய்களைப் போல் சாதாரன தடிமன், தொண்டை நோவு, இருமல் மற்றும் காய்ச்சல், அல்லது பெரிதளவான அறிகுறிகளான நிமோனியா மற்றும் சுவாசிக்கும் சிரமங்கள்.

அந்திபியோதிக் மூலம் கொரோனா வைரசை தவிர்ப்பதோ அல்லது குணப்படுத்த முடியுமா?
இல்லை, அந்திபியோதிக் வைரசை எதுவும் செய்யாது, அது பக்தேரியாக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். ஆகையால் வைரசுக்கு எதிராகப் பாவிப்பதால் எவ்வித பிரியோசனமும் இல்லை.

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்.

உங்கள் கவனத்திற்கு