16 மார்ச் 2020 இத்தாலி அமைச்சரவையின் தலைவர் Giuseppe Conteயின் பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகள்.
இத்தாலியின் 62% மக்கள் அவசரகால நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் . மறு பக்கம் இந்த நெறிமுறைகளை மதிக்காத மக்களும் உண்டு. இது தொடர்பான உங்கள் கருத்துக்கள்.
“தேவை இல்லாத நகர்வுகளை எவ்வழியாலும் தவிர்க்க வேண்டும். அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. அதன் பயன் தான் 62% ஒத்துழைப்பு. யுத்தத்திற்கு பிறகு இன்று வரை இப்பொழுதுதான் ஒரு அவசரகால நிலை எதிர்கொள்கின்றோம். பெரும்பான்மையான இத்தாலி மக்கள் இவ்விதிகள் எமது உறவுகளை பாதுகாப்புக்காகவே என்பதை உணர்வார்கள்.
இந்த கால கட்டத்தில், நெருக்கடியான நிலையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் தாதியார்களுக்கும் தேசிய கீதம் பாடி ஒரு உளமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்.”
1800 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், இத்தாலியில் தொற்றுநோயை தடுத்து நிறுத்த முடியுமா? இல்லாவிடில் பெரும்பான்மையான மக்கள் தொற்று நோய்க்கு உள்ளாவார்களா?
“தொடர்ச்சியாக வீட்டில் இருந்தால் இத் தொற்றுநோயை (coronavirus) கட்டுப்படுத்தலாம். விஞ்ஞானிகள், “நாம் இன்னும் உச்சக்கட்டத்துக்கு வரவில்லை” என்று, கூறுகின்றனர். இது ஒரு கடுமையான வாரம், முன் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். பாதுகாப்பு எச்சரிக்கைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது.
கடைசி 10 ஆண்டுகளில் மிக முக்கியமான போராட்டம் இதுவாகும். இதை வெற்றிகொள்வதற்கு 6 கோடி மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்.”
கொரியாவில் (Corea) நோயை இனம் காணுவதற்கான பரிசோதனை (tampone a tappeto) உருவாக்குவதன் மூலம், இத்தாலியின் இறப்பு விழுக்காட்டில் மாற்றத்தை பரிந்துரைக்கிறதா?
“தொழில்நுட்ப-விஞ்ஞானக் குழுவின் அறிகுறிகளால் ஈர்க்கப்பட்ட தீர்மானங்களின் முடிவுகளை சரிபார்க்க சில வாரங்கள் காத்திருக்க வேண்டும், மற்றும்படி புதிய தடைகள் எதுவும் தேவையில்லை, இப்போது உள்ளவற்றை கவனமாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். அனைத்து மோட்டார் வாகன நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஒன்றாக வெளியே சென்று ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றத் தலைவரின் ஆணைக்கிணங்க பூங்காக்கள்மூடப்பட்டும், மக்கள் ஒன்றுகூடுதல் தடுக்கப்பட்டும் வருகின்றது, காவல்துறையினர் இவ் ஆணைக்கிணங்க அவர்களும் முக்கிய பங்கினை தங்களுடைய செயற்பாடுகளின் மூலமாக நிறைவேற்றி வருகின்றனர்.இது தேவாலயங்களுக்கும் பொருந்தும். நான் நிறைய எதிர்ப்பார்க்கின்றேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நோய்த்தொற்றின் உச்சத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும், அனைவரும் வீட்டிலேயே தங்குவது நல்லது.”
தெற்கில் சுகாதார வசதிகள் போதிய அளவில் உள்ளனவா, அல்லது அவை குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா?
“மிகவும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் கூட குறிப்பிட்ட கணிப்புகளைச் செய்வது கடினம். வைரசின் பரவலை அடக்குவதோ அல்லது குறைப்பதோ தான் எங்களின் குறிக்கோள். இந்த நெருக்கடியை நீண்ட காலத்திற்கு நிர்வகிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக, தேசியம், பிரதேசம் முழுவதும் ஒரு பயனுள்ள பதிவை விநியோகிக்கிறது. நிச்சயமாக நாங்கள் தவறாக இருக்க முடியாது. எங்களுடைய செயற்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, வார இறுதி நாட்களில் வீட்டைவிட்டு வெளியேறி, மிலானோவில் இருக்கும் குடும்பத்தினரை சந்திப்பதோ அல்லது தெற்கில் வசிக்கும் வீட்டிற்குச் செல்லுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விடயம்.”
இரவு தொடருந்து (Treni notturni) தடைக்கு பின்பு வேறு தடைகளாக, மருந்தகங்களில் இருந்து பலசரக்குக் கடைகள் வரை மூடப்படுமா?
“அவசியமான சேவைகள் உத்தரவாதம் அளிக்கப்படும். பல்பொருள் அங்காடி, மருந்தகம், மருத்துவமனை போன்றவை செயல்படுகின்றன என்றால் அதற்கு பின்னால் உறுதியாக நிறுவனங்கள் பணி செய்வது தான் காரணம். இத்தாலி மிக சிறந்த திறனைக் கொண்டுள்ளது, தைரியத்துடன் செயல் பட்டது, இதைப் போன்று ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ், எங்களுடைய முறையை பின்பற்றுகிறார்கள்.”
பல தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் மீண்டும் தங்களால் தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்புள்ளதா என்று எண்ணி பயப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்வதும் செய்யாததையும் என்ற விருப்பத்தைத் தாண்டி உற்பத்தியை நிறுத்துவது நேர்மையற்ற போட்டியைத் தூண்டுவதாக இல்லையா?
“வணிக உலகம் மிகவும் கடினமான சவாலுக்கு அழைக்கப்படுகிறது. பல மூடப்பட்டுள்ளன, திறந்து இருப்பவர்கள் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கட்டளை போதுமானதாக இருக்காது. சேதம் தீவிரமாகவும் பரவலாகவும் இருக்கும், ஒரு புனரமைப்பு திட்டம் தேவைப்படும். அதிகமான விலைகள் பொருட்களுக்கு விதிக்கப்பட்டால் அல்லது அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள் இலாபம் பார்த்து விற்பனை செய்தால், நிதிக் காவலர் தடையிடுவார்கள். கொரோனா வைரஸுக்கு பின்னர் எதுவும் முன்பு போல் இருக்காது. வணிகம் மற்றும் தடையிலா அங்காடி விதிகளை மறுசீரமைக்க வேண்டும்.”
கண்ணீரும் குருதியும் மிகுந்த காலம் தொடரபோகின்றதா ?
“அவசரகாலத்தால் விதிக்கப்படும் செலவுகளை நமது பொருளாதாரம் தங்குவதற்கு விதிமுறைகள் மூலமாக பதிலளித்து வருகிறோம். தேவைபட்டால், முன் வந்து எமது நாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தயாராக உள்ளோம். முதலீடுகளினால், வரி குறைப்பால், எளிமைப்படுத்துவதால் மற்றும் புதுமையாக்கங்களால் இத்தாலி வரவு செலவு சட்டத்திலும் (legge di bilancio) மீண்டும் செயல்படுவதற்கு எங்களால் முயன்றதை செய்வோம். இத்தாலியை மீணடும் உயர்த்துவதற்கு உதவுவோம், எங்களால் இயலும் என உறுதியாக உள்ளேன்.”
இன்று இரவு G7 தலைவர்கள் இடையே நடைபெறப்போகின்ற ஒளித்தோற்ற மாநாட்டில் (videoconferenza) என்ன கேட்கபோகிண்றீர்கள்?
“சுகாதார மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு தேவை. இது தைரியமான தேர்வுகளுக்கான நேரம், இதில் இத்தாலி, ஐரோப்பாவில் முதலாவதாக இவ் வைரஸின் பரந்த பரவலை அனுபவித்த நாடக இருப்பதால் , குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கலாம்.”