மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்குமா? – பிரதமரின் பதில்கள்
மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதியாண்டுத் தேர்வுகள் எப்படி அமையும்.
அவசரகால நெறிமுறை அடிப்படையில் 3 ஏப்ரல் வரை பள்ளிகள், கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வைரசின் பரவுதல் குறைப்பதற்கு 3 ஏப்ரல் திகதி தாண்டியும் இந்த இடை நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டும் என்பதை இத்தாலி பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின் அறிகுறி இரு விடயங்களில் காணலாம்:
- தொலைத்தூரப் பாடங்கள் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதும்;
- கணினிவழியில் சோதனைகள் மற்றும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும்;
கல்வி அமைச்சிலிருந்து வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் சார்ந்து 2 சாத்தியக்கூறுகள் ஆலோசிக்கப்படுகிறது:
- Pasqua விடுமுறையை தாண்டி 20 ஏப்ரல் அல்லது 3 மே க்கு பின்பு திறப்பது;
- இப்பொழுது இருக்கின்ற இடை நிறுத்தத்தை மே இறுதி வரை நீடிப்பது.
ஜூன் மாதத்திற்க்கு பின்பு பள்ளி ஆண்டு தொடராது என்பது கல்வி அமைச்சர் Lucia Azzolina உறுதி செய்துள்ளார். அத்துடன் இந்த கல்வியாண்டு ரத்து செய்யப்படாது என்பதையும் தெரிவித்துள்ளார். Maturitá சோதனைகள் எவ்வாறாக நடைபெறும் சார்ந்து கருத்துக்கள் இதுவரை இன்னும் வெளிவரவில்லை.
தொலைதூரக் கணினிக் கல்வி
தேசியக் கணினிக் கல்வி படிப்படியாக வடிவம் பெறுகின்றது: இதற்கு உறுதியான வடிவத்தைக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமையாகும். இதற்கான கோட்பாடுகள் குறிக்கப்பட்டுள்ளன: கற்றல் நடவடிக்கைகள், அதாவது பாடங்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்குதல்.
இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் பள்ளிகளுக்கு செல்லாவிட்டாலும், நடைபெறுகின்ற பள்ளி ஆண்டை முறையாக முடிக்க வேண்டும்.
அதாவது, எட்டு மில்லியன் மாணவர்கள் இறுதி வரை கணினி வழியாக தொடர்ந்து படிக்க வேண்டும்.
தொலைதூர மதிப்பெண்கள்
தொலைதூர பாடங்கள் என்றால் வீட்டு பாடங்கள் மட்டும் இல்லை. தேர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் அதற்குரிய மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் வழங்குவது மாணவர்களுக்குறிய தண்டனை அல்ல. படித்த பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது ஆசிரியரின் கடமையும் மாணவரின் உரிமையும் ஆகும்.
மதிப்பெண்கள் எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் கல்வியமைச்சர் அனைவரையும் (ஆசிரியர் மற்றும் மாணவர்களை) நம்பிக்கைத்தன்மையுடன் இணைந்து செயற்பட வேண்டிக்கொள்கிறார்.
வீடியோக்கள் மற்றும் வீட்டுப்பாடங்களுக்கு கவனம் செலுத்துங்கள்.
அமைச்சகம் மேலதிகமான அறிவுறுத்தல்களை ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் கொடுக்கிறது:
- Asilo (பாலர் வகுப்பு) பிள்ளைகளுக்கு பெற்றோருடன் பார்க்கக்கூடிய விளையாட்டுத்தனமான காணொளிகளை கொடுக்க வேண்டும்;
- Primaria/Elementari மாணவர்களுக்கு பாடங்களுக்கு இடையில் இடைவேளைகள் கொடுக்க வேண்டும்;
- Medie/Superiori மாணவர்களுக்கு கணினிவழி பாடங்களும் மற்றும் புத்தக பாடங்களும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
மாற்றுத்திறன் பிள்ளைகளுக்கும் தொலைதூரப்பாடங்கள் நடாத்துவதற்கான இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை அமைக்கும் பொழுது மாணவர்கள் அதிக நேரம் “Screen” முன்னால் இருப்பதையும் மற்றும் அதிகப்படியான வீட்டுப் பாடச் சுமையை கொடுப்பதை தவிர்க்கும்படி கல்வி அமைச்சகம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறுதியாண்டுத் தேர்வு (Maturitá) எவ்வாறு மாறுகிறது?
“அவசரகால சூழ்நிலை மத்தியிலும் ஒரு தரமான தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறோம்” என்று கல்வியமைச்சர் Lucia Azzolina கூறியுள்ளார்.
நிச்சயமாக திகதிகள் மாறாது. 17 ஜூன் Maturitá சோதனைகள் ஆரம்பமாகும். Invalsi சோதனைகள் அல்லது Alternanza scuola-lavoro கேட்கப்பட மாட்டாது.
Maturitá தேர்விற்கு ஆசிரியர் குழுவில் (commissione d’esame) வெளி இடங்களில் இருந்து ஆசிரியர்கள் அனுமதிப்பதைச் சார்ந்து கல்வியமைச்சகம் ஆலோசிக்கின்றது. வெளி ஆசிரியர்களை உள்ளடக்குவதை மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்க்கிறார்கள்.
Maturitá வின் இரண்டாம் தேர்வு (Seconda Prova) மாற்றி அமைப்பதோ அல்லது முழுதாக அகற்றலாமோ என்பதையும் பரிசீலிக்கப்படுகிறது.
பள்ளி ஆண்டின் முதற்பகுதியில் (primo quadrimestre அல்லது primo trimestre) குறைவாக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் Maturitá தேர்வுக்கு அனுமதிப்பதை ஆலோசிக்கப்படுகிறது.
சூழ்நிலை காரணமாக அணைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதை அனுமதிக்க மாட்டொம் என்பதையும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்புப் போராட்டம்.
அணைத்து மாணவர்களுக்கும் தரமான கணினிகள் மற்றும் Internet தொடர்புகள் இருப்பதை உறுதி செய்யாமல் அல்லது அதற்குரிய வழிகளை பார்க்காமல் இந்த தொலைதூர படிப்பு நடவடிக்கைகளை தொழிலாளர் சங்கங்கள் எதிர்க்கிறார்கள்.
பொருளாதார ரீதியாக கடினமான சூழலில் வாழும் மாணவர்களுக்கு இவ்வாறான நடவடிக்கை அவர்களுடைய படிப்புரிமைகளுக்கு ஒரு தடையாக அமைகிறது என்பதை cgil,cisl, uil, gilda மற்றும் snals தொழிலார் சங்கங்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.