மருந்துச் சீட்டுகளைப் (Ricette mediche) பெற நீங்கள் இனி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை!
மருந்துச் சீட்டுகளைப் பெற நீங்கள் இனி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை, மருந்துச் சீட்டின் எண்னை (numero di ricetta elettronica) மின்னஞ்சல் மற்றும் whatsapp வழியாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனாவைரசின் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கோடு கடைசியாக சிவில் பாதுகாப்பு துறையினால் வெளியிடப்பட்ட உத்தரவில், இனி மருந்துச் சீட்டுகளை பெற மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மருந்தகத்திற்கு கொடுக்கவேண்டிய மருந்துச்சீட்டை குடும்ப மருத்துவரிடம் சென்று பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை, நேரடியாக மின்னஞ்சல் அல்லது whatsapp ஊடாக மருந்துச்சீட்டின் எண்ணை (numero di ricetta elettronica) பெற்றுக் கொண்டு மருந்துகளை வாங்கலாம் என அறியத்தருகிறார்கள்.
மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நோயாளர்கள் தங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு, மருந்துச்சீட்டின் எண்ணை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம், மற்றும் அச் சீட்டினை பெற வைத்தியரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
மருந்துச் சீட்டினை எப்படி பெறுவது?
பெறுவதற்கான வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன:
1) வைத்தியரின் அலுவலகத்திற்க்குச் சென்று மருந்துச்சீட்டினை பேப்பர் (ricetta cartacea) வடிவில் பெறலாம். (மருத்துவரிடம் சென்று பெறுவது தடைசெய்யப்படவில்லை, ஆனால் அதைத் தவிர்ப்பது நல்லது)
2) உங்கள் மின்னஞ்சல் முகவரியை மருத்துவரிடம் குறிப்பிடுவதன் மூலம் (ஒரு சாதாரண மின்னஞ்சல் அல்லது PEC) மருந்துச் சீட்டினை பெறலாம்.
3) உங்கள் தொலைபேசி எண்ணை மருத்துவரிடம் கொடுப்பதன் மூலம், மருந்துச் சீட்டின் எண் (numero di ricetta elettronica) அல்லது மருந்துச் சீட்டின் இணைப்பை எஸ்.எம்.எஸ் வழியாக அல்லது Whatsapp வழியாகப் பெறலாம்.
4) இறுதியாக, தொலைபேசி அழைப்பு வழியாகவும் உங்களது மருந்துச்சீட்டின் எண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவையாவும், உங்களது தேவையான மருந்துகளை மருத்துவரிடம் “சென்று” பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதற்காகவே மேற்க்கொள்ளப்பட்டவை ஆகும்.