Carta famiglia 2020: அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் சலுகைகளைப் பெற புதிய வசதி.
அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு உதவ அரசு மேற்கொண்ட Carta famiglia எனும் வசதியை மார்ச் 18 2020 முதல் பெற்றுக்கொள்ளலாம்.
இது ஏற்கனவே 2019 நிதிச்சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக இருப்பினும் இந்த COVID-19 அவசரநிலை, இந்த திட்டத்திற்கு ஒரு ஊந்துதலை அளித்துள்ளது.
மேலும் வரும் வாரங்களில் இந்த உதவி விரைவில் கொரோனவைரசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், ஒரு குழந்தையுடன் இருக்கும் குடும்பங்களுக்கும் கூட வழங்கப்படும் என குடும்ப நலத்துறை அமைச்சர் Elena Bonetti தெரிவித்துள்ளார்.
Carta famiglia 2020 என்பது என்ன?
- Carta famiglia என்பது 26 வயதிற்கு உட்பட்ட குறைந்தது மூன்று பிள்ளைகளைக் கொண்ட (நிச்சயமாக தத்தெடுக்கப்பட்ட மற்றும் வளர்ப்பு குழந்தைகள் உட்பட) குடும்பங்களுக்கான ஒரு சலுகை.
- Carta famiglia 2020 நிதிச்சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- இது ஒரு டிஜிட்டல் அட்டை முறை வசதி அதாவது card sconti digitale – tessera sconti.
- அட்டை வழங்கப்பட்டதும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்கள் போக்குவரத்து, கலாச்சார, விளையாட்டு, சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கான குடும்ப சந்தாக்கள் (abbonamento famiglia), தனியார் மற்றும் பொது சேவைகளுக்கான சலுகைகள், உணவு மற்றும் உணவு அல்லாத விற்பனை நிலையங்களிலும் , சலுகைகளைப் பெற உரிமை உண்டு. இந்த சலுகைகள் யாவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.
- இத்தாலிய குடியுரிமை அல்லது இத்தாலியில் நிரந்தர வதிவிடமுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள நாடுகளின் குடியுரிமை கொண்டுள்ளவர்கள் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.
Carta famiglia 2020 எப்படி பெறுவது?
- அட்டைய இணையத்தளமூடாக (online) மட்டுமே பெற முடியும், அதாவது பெற்றோர் தங்களது Spid கணக்கு மூலம் இந்த அட்டைக்கான பதிவு மேற்க்கொள்ளலாம்.
தளத்தில் பதிவு செய்த பின் குடும்ப உறுப்பினர்களின் codici fiscali பதிவு செய்தல் வேண்டும். பின்பு, கணினி உங்களது டிஜிட்டல் அட்டை வெளியிடும். அதை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.
அட்டையை பெற்றபின் இந்த திட்டத்திற்கு ஆதரவு பெற்ற கடைகள், நிறுவனங்களில் உங்களது அட்டையின் எண்ணை காட்டுவதன் மூலம் சலுகைகள் வழங்கப்படும்.
Carta famiglia 2020 இதற்கு காலாவதி திகதி உள்ளதா?
- 26 வயதிற்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் வரை இந்த சலுகை செல்லுபடியாகும். இல்லாவிடின் வருட இறுதியில் (31 Dicembre 2020) முடிவுப்பேரும்.
Carta famiglia அட்டையை பெற இங்கே பதிவு செய்யுங்கள்.
திட்டத்தில் இணைந்துள்ள கடைகளை இங்கே காணலாம்.