ஒரு நகராட்சியிலிருந்து இன்னொரு நகராட்சிக்கு செல்வதற்கானத் தடை
நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசரத் தேவைகள் அல்லது சுகாதாரக் காரணங்களைத் தவிர பொது அல்லது தனியார் போக்குவரத்து வழிகள் மூலம் ஒரு நகராட்சியிலிருந்து இன்னொரு நகராட்சிக்கு செல்வதற்கானத் தடையை உள்நாட்டு மற்றும் சுகாதார அமைச்சர்கள் அனைத்து நபர்களுக்கும் விதித்துள்ளனர்.
COVID-19 நோயின் பரவுதலை தடுக்கும் முகமாக இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22 முதல் பிரதம அமைச்சரின் புதிய ஆணை அமுல்படுத்தப்படும் வரை இக் கட்டளையானது செல்லுபடியாகும். இதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து நிலையங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் அதிகளவான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தடையை மீறுபவர்களுக்கு தண்டனைச் சட்டத்தின் 650 வது பிரிவின் அடிப்படையில் மூன்று மாதங்கள் வரை கைது மற்றும் அபராதமும் விதிக்கப்படும். ஆனால் இன்னும் கடுமையான அபராதங்களுடன் புதிய நடவடிக்கையை வெளியிடுவதற்கான சாத்தியத்தையும் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.