புதிய தொற்றுதல் குறைந்து போனாலும் உச்சக் கட்டம் என்னும் வரவில்லை.
மூன்றாவது நாளாக தொடர்ந்து புதிய தொற்றுதலின் எண்ணிக்கை குறைவதை காணுகிறோம். அந்த எண்ணிக்கை குறைந்து போனாலும் பரவுதல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. முக்கியமாக தென் மாநிலங்களில் நடக்கும் பரவுதலை கண்காணிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: நாங்கள் பார்க்கின்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் 10-12 நாட்களுக்கு முன் நடந்த தொற்றுதலின் விளைவுகள். அரசாங்கத்தால் விதிக்கப் பட்ட நெறிமுறைகளின் பயன்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து காணக்கூடியதாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து போவதால் மேலும் தொற்றுதலின் உச்சக் கட்டம் வரவில்லை என்பதே அர்த்தம் ஆகும். (உச்ச கட்டம் என்றால் என்ன?)
25-03-2020 Radio Capital காற்றாலையில் கொடுக்கப்பட்ட பேட்டியில் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குனர் Ranieri Guerra சில கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
“இந்த வாரத்தில் ஒரு திருப்புமுனை காணலாம். தொற்றுதலின் உச்சக்கட்டம் இந்த நாட்களில் நடைபெறலாம்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்தார். “ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமைத் தன்மை இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவுக்கு அருகில் சென்று கொண்டு இருக்கின்றோம். மேலும் ஒரு பொதுவான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம். தொடக்கத்தில் இத்தாலி தனிமைப்படுத்தப்பட்டது” என்ற கடுமையான விமர்சனத்தை Guerra தெரிவித்தார்.