கொரோனாவைரசு, கடைகளுக்குச் செல்லும்போது தொற்றுக்கு உள்ளாகாமல் தவிர்ப்பது எப்படி?
நச்சுயிரியல் வல்லுநர் Fabrizio Pregliasco, ஊட்டச்சத்து நிபுணர் Marcello Ticca, Consumatori.it இன் தலைவர் Massimiliano Dona மற்றும் இத்தாலிய நுகர்வோர் அமைப்பு(Altroconsumo) உறுப்பினர் Manuela Cervelli ஆகியோர் சில கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
- முகக் கவசம் இல்லாமல் கடைகளுக்குச் செல்லலாமா?
ஆம், ஆனால் தொற்றுக்கு உள்ளாக்கியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை என்றால் மட்டுமே செல்லலாம். மற்றவர்களுடன் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் கடைகளுக்குள் இருக்கும்போது உங்கள் முகத்தை (வாய், மூக்கு, கண்கள்) ஒருபோதும் கைகளால் தொடாதீர்கள், வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை நன்கு சவர்க்காரம் உடன் கழுவவும், வாங்கிய பொருட்களை வைத்த பிறகும் மீண்டும் கழுவவும்.
- நான் தனியாக, வயதானவராக, நோய்வாய்ப்பட்டவராக இருந்தால், யாராவது எனக்காக பொருட்கள் வாங்கலாமா ?
ஆம், பல தன்னார்வ சங்கங்கள் உள்ளன, அவை மிகவும் பலவீனமான மக்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு செயல்படுகின்றன. உங்களுக்கு அருகில் இருக்கும் திருச்சபையிடம் (parrocchia) கேட்கலாம் அல்லது வலைத்தளங்களை அணுகவும் (உதாரணத்திற்கு Anpas.org இல் இத்தாலி முழுவதுமான தன்னார்வலர்களின் பட்டியல் உள்ளது). சிறிது நேரங்களில் அயலவர்களை உதவ முன்வருகிறார்கள், அப்படி அவர்கள் பொருட்களை கொண்டுவரும் பட்சத்தில் ஒருவருக்கொருவரான தொடர்பை தவிர்க்கவேண்டும்.
- ஒரு வாரம் முழுவதும் எனக்குத் தேவையான அனைத்தையும் எப்படி வாங்குவது?
நீங்கள் வாங்க வேண்டியவற்றை பல் வகைப்படுத்தலாம் மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாங்கவும் கூடாது. கைக்குட்டைகள் (fazzoletti) , காகித பொருட்கள், சுகாதாரத் துண்டுகள்(assorbenti), carta igienica, சவர்க்காரங்கள் போன்றவற்றை இணையத்தளத்தில் (Amazon) அல்லது கடைகளின் வலைத்தளங்களில் வாங்கலாம். பல வலைத்தள மருந்தகங்கள் உள்ளன (ஒன்று Farmacosmo.it) அங்கு நீங்கள் நீண்ட காலம் தேவைப்படும் மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், அக்கம் பக்கங்களில் உள்ள சிறிய கடைகளை (மரக்கறி, இறைச்சி, பழக்கடை) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதலாக அவர்கள் பொருட்களை உடனே எடுக்கும் படியான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
- புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க முடியவில்லை என்றால், அவற்றை உறைந்த நிலையில் வாங்கலாமா?
ஆம், அவை அடிப்படையில் அதே ஊட்டச்சத்துக்களை பராமரிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட பாலுக்கு மாற்றாக, நீண்ட காலாவதி உள்ள பாலை பயன்படுத்தலாம்.
- இப்போதய சூழ்நிலையில் வீட்டில் இருக்கவேண்டிய அவசியமான உணவுப் பொருட்கள் எவை?
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய உணவுகளை வாங்குவதும் உண்பதும் மிக அவசியமானது. எடுத்துக்காட்டாக சில உயிர்ச்சத்துக்கள் (vitamine), தாதுக்கள் மற்றும் Omega 3 அதிகம் கொண்ட உணவுகள்:
vitamina C, சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது: இது சாறு உள்ள பழங்கள், fragola, kiwi, தக்காளி, rucola போன்ற கீரை வகைகள் அல்லது திராட்சை வத்தல் போன்றவற்றில் காணப்படுகிறது.
vitamina A , உடலை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது: இது முக்கியமாக பால், மஞ்சள் மற்றும் பச்சை காய்கறிகளில் காணப்படுகிறது.
vitamina D, உள்ளார்ந்த எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது: முட்டையின் மஞ்சள் கரு, மீன், பால்
தாதுக்களில் (minerali) துத்தநாகம்(zinco) மற்றும் செலினியம்(selenio) மிக முக்கியவை ஆகும். அவை குறிப்பாக தானியங்கள், இறைச்சி மற்றும் மீன்களில் உள்ளன.
Omega 3 அனைத்து கடலுணவுகளிலும் உள்ளது.
பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மற்றும் முழுத் தானியங்கள் நிறைந்த நன்கு கட்டமைக்கப்பட்ட உணவு, குடல் மைக்ரோ பயோட்டாவை(குடலின் நுண்ணுயிர்களின் அமைப்பு) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது குடலில் நம்மிடம் உள்ள மிக முக்கியமான நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை உறுதி செய்கிறது.
எனவே, தற்போதைய நிலைமையில் நீங்கள் வீட்டில் தேவையானப் பொருட்களின் பட்டியலை உருவாக்க வேண்டும், இதனால் கடைகளுக்குள் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கலாம். கடைகளுக்குச் செல்வது என்பது ஒரு பொழுதுபோக்கு நேரமாக இல்லாமல், ஒரு அவசியமான செயலாக பார்க்க வேண்டும். கடைகளில் வேலை செய்பவர்கள் எங்களுக்காக வேலை செய்கிறார்கள், அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.