சுய அறிவிப்புப் படிவத்தை – Autodichiarazione உள்துறை அமைச்சகம் மீண்டும் மாற்றியுள்ளது (அதை நிரப்புவது எப்படி).
வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட நகர்வுகளுக்கான விதிமுறைகளை உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது.
?? புதிய படிவத்தினை தரவிறக்கம் செய்ய ??
புதிய படிவத்தை நிரப்புவது எப்படி என்று எடுத்துக்காட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதில் வெளியே செல்லும் போது கொண்டு செல்லவேண்டிய சுய அறிவிப்புப் படிவத்தில் ஒரு புதிய இணைப்பு காணப்படுகிறது.
காவல்துறையினரால் சோதனைக்கு நிறுத்தப்படும் நபர் நோயினை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருப்பதாகவும், இந்த சுய அறிவிப்பு படிவப்படி அரசாங்கம் மற்றும் மாநில ஆளுநர்களால் விதிக்கப்பட்ட நெறிமுறைகளை அறிந்திருப்பதாகவும் நபர் உறுதி செய்கிறார். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மேலும் 400 யூரோக்கள் முதல் 3000 யூரோக்கள் வரை அபராதங்கள் விதிக்கப்படும். தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் அதை மீறி வீட்டை விட்டு வெளியே செல்லும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதியப்படும் என்று மாற்றப்பட்டுள்ளது.
சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி: