Bonus 600 யூரோ: திறக்கப்பட்ட முதல் நாளில் INPS இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது
“இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia) ஆணையின் கீழ் partita IVA, சுயதொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் வழங்கும் திட்டம் இன்று 1 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிகமான கோரிக்கைகள் அனுப்பப்பட்ட படியால் இன்று காலையில் INPS இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. INPS நிறுவனத்தின் தலைவர் Pasquale Tridico இந்த பிரச்சினைக்கு பின்னால் hackers இன் தாக்குதல்கள் உள்ளன என்று கூறியுள்ளார். காலை 8 மணி அளவில் 300.000 மேலான படிவங்கள், வினாடிக்கு 300 படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திறக்கப்பட்ட நாளிலே இணையத்தளம் முடக்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தையை கடுமையாக விமர்சித்தார்கள்.
இனிவரும் நாட்களில் இணையத்தளம் படிப்படியாக திறக்கப்படும் என்பதை Tridico தெரிவித்துள்ளார். அதாவது காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை CAF மற்றும் Patronati நிறுவனங்களுக்கும், மாலை 4 மணிக்கு பின் தனிநபர்கள் இணையத்தளத்தை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
இந்த 600 யூரோ சலுகை, 35 ஆயிரம் யூரோக்கள் வரை வரி இல்லாத வருமானத்தை கொண்டிருப்பவர் வழங்கப்படும்.
அல்லது 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யூரோக்கள் வரை வருமானத்தை கொண்டுள்ளவர்கள் 2020 ஆம் ஆண்டில் முதல் 3 மாத வருமானத்தில் குறைந்தது 33% வீழ்ச்சியை சந்தித்ததாக நிரூபிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேவைகளின் அடிப்படையில் 600 யூரோக்கள் இருந்து 800 யூரோக்கள் வரை அதிகரிக்கப்படலாம் என்று பொருளாதார துணை அமைச்சர் Antonio Misiani “Radio Capital” காற்றலையில் அறிவித்துள்ளார்.