“Bonus spesa”: உங்கள் Comune சார்ந்து எங்களிடம் விசாரியுங்கள்!
அத்தியாவசிய உணவு அவசரநிலையைச் சமாளிப்பதற்காக நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்க நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உணவு அவசரநிலையைச் சமாளிப்பதற்கு 8 ஆயிரம் இத்தாலிய நகராட்சிகளுக்கு (Comuni) மொத்தம் 400 மில்லியன் யூரோக்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நகராட்சியின் (Comune) சமூக சேவை அலுவலகம் பொருளாதார சிக்கலில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவற்றின் அவசர மற்றும் அத்தியாவசிய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி பங்களிப்பை தீர்மானிக்கும். மேலும், எந்தவொரு பொது பொருளாதார ஆதரவும் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு நகராட்சியும் எந்த வகையில் இந்த நிவாரணத்தை தன் மக்களுக்கு வழங்குவது என்று முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டதால், ஒவ்வொரு நகராட்சியினதும் நிவாரணதிற்கான விதிமுறை வேறுபடும்.
தற்போது சில நகராட்சிகள் இதற்கான விண்ணப்பங்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, கீழ்வரும் Comune யில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் இணைக்கப்பட்டுள்ள link மூலம் தகவல்களைப் பெறலாம்.
?? Agrate Brianza (MB)
?? Aicurzio (MB)
?? Bagnolo (RE)
?? Bellusco (MB)
?? Bernareggio (MB)
?? Bibbiano (RE)
?? Bologna (BO)
?? Bussolengo (VE)
?? Cadelbosco di Sopra (RE)
?? Castelgoffredo (MN)
?? Castelnovo di Sotto (RE)
?? Cavallino (LE)
?? Cavriago (RE)
?? Firenze (FI)
?? Genova (GE)
?? Lecce (LE)
?? Mantova (MN)
?? Milano (MI)
?? Palermo (PA)
?? Reggio Emilia (RE)
?? Rubiera (RE)
?? San Giorgio su Legnano (MI)
?? Sommacampagna (VR)
?? Sona (VR)
?? Valdilana (BI)
மேலும், நீங்கள் வசிக்கும் நகராட்சியின் நிவாரண விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு தமிழ் தகவல் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.