Borelli: மே மாதம் வரை தற்போதைய நெறிமுறைகள் தொடரலாம்
மே மாதம் வரை அனைவரும் வீட்டில் இருக்கவேண்டிய சாத்தியக்கூறு உண்டு என சிவில் பாதுகாப்புத் துறையின் தலைவர் Borelli தெரிவித்திருக்கிறார்.
Radio Capital காற்றலைக்கு வழங்கிய உரையில் சுகாதார வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் நிலைமையின் விபரங்களை கூறினார்.
“கடந்த வாரங்களில் ஒவ்வொரு நாளும் மிகவும் வலுவான ஒரு பணிச்சுமையுடன் அசாதாரண தியாகங்களோடு ஓடிக்கொண்டு இருந்தன. ஆனால் தற்போதைய நிலைமை மாறுபட்டுள்ளது.
இவ் பணிச்சுமைகள் குறைந்துள்ளன. இது ஆறுதல் தரும் ஒரு விடயமாக உள்ளது. அவசரநிலையை குறைந்த சிரமத்துடன் நிர்வகிக்க அனுமதிக்கும் சூழ்நிலை இது. இந்த நிலைமை தொடர்வதற்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகள் நீடிக்க வேண்டும்.”
மேலும் மே 1 வரை சில வாரங்கள் நாம் வீட்டிலே தான் இருக்க கூடிய சாதியக்கூறுகள் உள்ளன என்று தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் திறப்பதும் மற்றும் சாதாரண வாழ்வுமுறைக்கு திரும்புவதும் படிப்படியாக தான் செய்யவேண்டும். இதுதான் எங்கள் நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் என்று குறிக்கின்றோம். இந்த காலத்தில் எவ்வாறாக எங்கள் வாழ்வுமுறைகள் மாற்றியமைக்க வேண்டும், என்ன நெறிமுறைகள் கடைபிடிக்கவேண்டும் என அரசாங்கம் வல்லுனர்களின் ஆலோசனைப்படி தீர்மானிக்கும்.
முகக் கவசம் அணிய வேண்டிய பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுமா?
நிச்சயமாக முக கவசங்கள் தேவை, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொறுப்பான நடத்தை தேவை. தொழில்நுட்ப-விஞ்ஞான பகுதியின் வல்லுநர்கள் மீட்டெடுப்பின் இயக்க முறைகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்று பதிலளித்தார்.
மேலும், தற்போது முக கவசங்களின் தேவை 20-30 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது வரை இவை இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன ஆனால் வரும் காலங்களில் இவை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.