SPID என்றால் என்ன?
இந்த நவீன காலத்தில் கூடுதலான வேலைகள் கணினி மூலமாக நடைபெறுகிறது. இன்று இத்தாலி அரசாங்கம் வழங்குகிற முக்கியமான சேவைகளும் கணினி மற்றும் இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுவாகவே அரசாங்க சேவைகள் பயன்படுத்துவதற்கு நாங்கள் எங்களுடைய அடையாளத்தை கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும். அது அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது எதாவது ஒரு அடையாள ஆவணமூடாக செய்வது வழக்கம்.
ஆனால் இன்று கணினி மற்றும் இணையத்தளம் ஊடாக அதே ஆவணங்கள் பயன்படுத்துவது ஒரு முழுமையான உறுதி வழங்காது. மேலும் இணையத்தளங்களில் திருடுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நவீன காலத்தில் அரசாங்கத்திற்கு ஒரு நவீன அடையாளம் ஒன்று தேவைப்படுகிறது.
இத்தாலி அரசாங்கத்தால் SPID (Sistema Pubblico di Identità Digitale) என்று பொது எண்முறை அடையாள வடிவமைப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கணினி மற்றும் இணையத்தளங்களில் எங்கள் அடையாளத்தை உறுதி செய்யமுடியும்.
இந்த அடையாளத்தை பயன்படுத்தினால் மிக இலகுவாக கணினி வழியூடாக அரசாங்க சேவைகள் பெற்றுக்கொள்ளலாம்.
பொது நிர்வாகம் மற்றும் தனியார் உறுப்பினர்களின் இணையத்தளத்தில் வழங்கும் சேவைகளை அணுகுவதற்கு நாங்கள் இந்த ஒற்றை எண்முறை அடையாளத்துடன் பயன்படுத்தலாம். கணினிகள், tablet மற்றும் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளுக்கு இந்த அடையாளம் நாங்கள் யார் என்பதை உறுதி செய்கிறது.
இந்த SPID எப்பொழுதும் நாங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வாறாக SPID அமைந்துள்ளது?
SPID இரு பகுதியால் அமைந்துள்ளது:
- ஒரு பயனர்சொல் (Username);
- ஒரு கடவுச்சொல் (Password).
அனைத்து பொது நிர்வாகம் மற்றும் தனியார் சேவைகள் பெற்றுக்கொள்வதற்கு SPID மட்டும் போதும். இதனூடாக இலகுவாக மற்றும் பாதுகாப்பான முறையில் இந்த சேவைகள் பெற்றுக்கொள்ளமுடியும்.
SPID பயன்படுத்தும் சேவைகளில்:
- மருத்துவ முன்பதிவுகள் (prenotazioni sanitarie)
- பாடசாலை பதிவு செய்தல் (iscrizioni scolastiche)
- பொது wi-fi பாவனை
- INPS, INAIL, Comune சேவைகள் போன்ற பல்வேறு ஆதரவு பெற்ற நிறுவங்களின் சேவைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்
SPID செய்வதற்கு தேவையான ஆவணங்கள் எவை ?
- ஒரு சரியான அடையாள ஆவணம் (carta di identità, passaporto அல்லது permesso di soggiorno) மற்றும் உங்களுடைய சுகாதார அட்டை (tessera sanitaria);
- வெளிநாட்டில் வசிப்பவராயின், வழங்கப்பட்ட codice fiscale;
- ஒரு மின்னஞ்சல் முகவரி (indirizzo e-mail) , உபயோகிக்கும் தொலைபேசி இலக்கம்.
SPID யாரிடம் மற்றும் எப்படி செய்வது?
உங்கள் SPID செய்வதற்கு பல நிறுவனங்களை அணுகலாம். இவற்றில் சில நிறுவனங்கள் நேரில் சந்தித்து செய்வதும் சில நிறுவனங்கள் தொலைதூரத்தில் இணையத்தளம் ஊடாக SPID செய்வதை அனுமதிக்கிறார்கள். தொலைதூரத்தில் Webcam ஊடாக செய்வதற்கு ஒரு கட்டண செலவு வழங்கவேண்டும்.
நீங்கள் அணுகக்கூடிய நிறுவனங்கள்: Poste Italiane, Aruba, Infocert, Intesa, Namirial, Register, Sielte, Tim, Lepida.
COVID-19 அவசரக்கால நிலையினால் இன்று பல நிறுவனங்கள் இந்த SPID இலவசமாக வீட்டில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு: http://spid.gov.it/richiedi-spid
யார் Spid கோரலாம்?
SPID இனை 18 வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து இத்தாலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமை கொண்டவர்கள் அல்லது இத்தாலியில் வசிப்பவர்கள்.