விவாதங்களுக்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். கொரோனாவைரசால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு 1 லட்சக் கோடி யூரோக்கள் (1000 miliardi euro) பெறுமதியான உதவிகள் வழங்கப்படும் என்று நேற்று நடைபெற்ற சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சு இத்தாலி மற்றும் எசுப்பானியாவின் கோரிக்கையாக உள்ள CoronaBond பிணைப் பத்திரங்கள் வெளியிடுவது முடக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 54.000 கோடி யூரோக்கள் (540 milioni euro) உடனடி நிதி உதவியாகவும், எதிர்காலத்தில் மறுசீரமைப்புக்கு மேலதிக 50.000 கோடி யூரோக்கள் (500 milioni euro) ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உதவிகள் எவ்வாறாக வழங்கப்பட வேண்டுமென கடந்த நாட்களில் தென் ஐரோப்பிய நாடுகளுக்கும் வட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு பெரும் விவாதமாக இருந்தள்ளது. பல மணி நேர கூட்டத்திற்கு பின்பு தான் அனைவருக்கும் திருப்திகரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் இவ்வாறான உதவிகள் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் கொண்டு வரும் என்பது கண்காணிக்க வேண்டும்.
2009 இல் கிரீஸ் நாட்டுக்கு நடந்ததுபோல் பெரும் கடனால் அவர்களின் இறையாண்மை முடக்கப்பட்டது. அதே சூழ்நிலையை சந்திக்க வேண்டும் என்று தென் ஐரோப்பிய நாடுகள் அச்சப்படுகிறார்கள். வழங்கும் நிதிக்கு உறுதியான உத்தரவாதங்களை வட நாடுகள் எதிர்பார்க்கின்றார்கள்.
இவ்வளவு காரசாரமான விவாதங்களுக்கு பின்பு ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும், கொரோனாவைரசின் தாக்கத்தால் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இன்று ஒற்றுமையாக இல்லை என்பது தான் உண்மை.