Covid-19 தடுப்பூசி மொத்த உற்பத்திக்கு நிதி திரட்டுகிறார் Bill Gates
Microsoft நிறுவனர் Bill Gates கொரோனாவைரசுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகின் பணக்கார தனியார் அறக்கட்டளையான Bill & Melinda Gates Foundation, 2000 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் சேர்ந்து Gates ஆல் நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக போலியோ, மலேரியா மற்றும் H.I.V போன்ற “நோய்களை ஒழிப்பதற்கான” போராட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்போது Covid-19 க்கான ஆராச்சியில் இறங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன், அதை பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டும், எனவே அனைத்து நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதாக Times பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் Gates இதைக் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவில், நாம் அனுபவிக்கும் நிலைமை “ஒரு உலகப் போர் போன்றது, ஆனால் நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உலகளாவிய தொற்றுநோயின் அபாயங்கள் குறித்து Gates ஏற்கனவே எச்சரித்திருந்தார், மேலும் Covid-19 இனால் நடந்து கொண்டிருப்பவையைப் பார்க்கையில் தனது “மோசமான கனவு நனவாகியுள்ளது” என்றும் விவரித்தார்.
Oxford பல்கலைக்கழகத்தின் Jenner நிறுவனம் முதல் ஒரு இத்தாலிய நிறுவனமான Advent-Irbm வரை மிகவும் புதுமையான அனைத்து தடுப்பூசி ஆராய்ச்சி திட்டங்களுடனும் தொடர்பில் இருக்கின்றார்.
“(அவர்களின்) தடுப்பூசி திறன் வாய்ந்ததாக இருப்பின், என்னுடன் ஒரு கூட்டமைப்பில் உள்ள மற்றவர்களும் பாரிய உற்பத்தி நடவடிக்கைகளை உறுதி செய்வோம்” என்று Gates நேர்காணலின் போது உறுதியளித்தார்.
தற்போது, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் Jenner நிறுவனத்திற்கு ஆராச்சியை “முழு வேகத்தில்” தொடர போதுமான நிதிகளை வழங்கியுள்ளது. இத் தடுப்பூசி சரியானதாக இருந்தால் பெரிய அளவில் விரைவாக உற்பத்தி செய்ய தயாராக இருக்க Microsoft நிறுவனர் மருந்து நிறுவனங்களுடன் பேசிவருகிறார். மேலும், “முழு உலகிற்கும் போதுமான அளவு உற்பத்தி செய்வதே குறிக்கோள்” என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மே மாதத்தில் online மூலம் கூடவிருக்கும் Coronavirus Global Response Summit உச்சி மாநாட்டில், தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக 6.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை திரட்ட வேண்டும் என்று Gates எதிர்பார்க்கிறார்.
மார்ச் மாதத்தில் Microsoftன் இயக்குநர் பதவியிலிருந்து விலகிய பின்னர், Bill Gates ஒரு முழுநேர மனிதநேய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். கொரோனாவைரசுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமாக நகர்ந்த முதல் அமைப்புகளில் அவரது அறக்கட்டளையும் ஒன்றாகும்: வீட்டிலேயே சோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் Covidக்கு எதிரான ஏழு பரிசோதனை தடுப்பூசிகள் போன்ற பெரிய அளவிலான திட்டங்களுக்கு 125 மில்லியன் Dollars அவர் உடனடியாக நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.