“Decreto maggio” ஆணையில் சேர்க்கப்படவுள்ள புதிய அம்சங்கள்

44 விதிமுறைகள் கொண்ட தொகுப்பு, முடக்குநிலை மற்றும் கொரோனா வைரசு தொற்றுநோயால் ஏற்பட்ட கடினமான தருணத்தில் பொருளாதாரம், வணிகங்கள் மற்றும் குடிமக்களை ஆதரிக்க 50 பில்லியன் யூரோக்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டு மே மாதத்திற்கான ஆணை “Decreto maggio” இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கப் படவுள்ளது.

«அவசரநிலைக்கு முதல் பதிலாக, நாங்கள் சுமார் 19 மில்லியன் நிதி மூலம் மக்களுக்கான ஆதரவை உத்தரவாதம் செய்தோம். வேலைகள் சார்ந்து Cura Italia ஆணையின் மொத்த 25 பில்லியன் நிதியில் 10 பில்லியன் யூரோக்களை ஒதுக்குவதன் மூலம் இதைச் செய்தோம்» என்று மே தினமன்று தொழில் அமைச்சர் Nunzia Catalfo தனது facebook பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்னும் சில நாட்களில் அமைச்சர் சபையில் ஒப்புதல் அளிக்கப்படவிருக்கும் புதிய ஆணையில் “கடைக்காரர்கள், வர்த்தகர்கள், ஊழியர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களையும் ஆதரிக்க ஒதுக்கப்பட்ட வளங்கள் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும்” என்றும் உறுதியளித்துள்ளார்.

குடும்பங்கள்

குடும்பங்களுக்கு ஆதரவளிக்க கூடிய நிதி ஒதுக்கப்படும். குழந்தை பராமரிப்பாளர்களுக்கான (baby sitter) சலுகை 600 இருந்து 1200 யூரோக்கள் வரை அதிகரிக்கப்படும். சுகாதார பணியாளர்களுக்கு இந்த சலுகை 2000 யூரோக்களாக கூட்டப்படும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட விசேட பெற்றோர் விடுப்பு (congedo parentale retribuito) 30 நாட்களாக நீடிப்பு. இது 30 செப்டம்பர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணிநீக்கங்கள்

23 பிப்ரவரி மற்றும் 17 மார்ச் 2020 க்கு இடையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை தற்காலிக பணிநிறுத்தம் மூலம் மீண்டும் பணியில் அமர்த்துவது சாத்தியப்படும். இன்னும் 3 மாதங்களுக்கு (ஆகஸ்டு வரை) பணிநீக்கங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

சுயதொழில் செய்வோர்

சுயதொழில் செய்பவர்களுக்கு மே மாதத்தில் 1000 யூரோக்கள் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இது “2019 ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டின் இந்த இரண்டு மாதங்களுக்கான வருமானத்தில் குறைந்தபட்சம் 33% சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்க வேண்டும் “.

பருவகால தொழிலாளர்களுக்கான சலுகை

Cura Italia ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, 20 பில்லியன் நிதி சமூக பொருளாதார உதவிகளை புதுப்பித்தல் மற்றும் வலுப்படுத்துதல் ஒதுக்கப்பட்டுள்ளன. Cassa integrazione in deroga 18 வாரங்களாக உயர்ந்து அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30 2020 வரை காலாவதியாகும் Naspi மற்றும் Discoll கொடுப்பனவுகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்படுகிறன. மேலும், மார்ச் மாதத்தில் Bonus 600 யூரோ சலுகை பெற்ற அனைவருக்கும் ஏப்ரல் மாததிற்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் பருவகால தொழிலாளர்களுக்கு, 1000 யூரோக்கள் கொடுப்பனவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவேலைத் தொழிலாளர்கள் (lavoratori domestici)

ஆணையில் சேர்க்கப்படாத முதியோர் பராமரிப்பாளர்கள் (badanti) மற்றும் வீட்டுப் பணியாளர்களும் (colf) இந்த ஆணையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வேலை நேரத்தில் குறைந்தது 25% சதவிகிதமாவது வேலை நேரம் குறைக்கப்படுள்ளது என்று நிரூபிக்கும் பட்சத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு 400 முதல் 600 யூரோக்கள் வரை சலுகை உள்ளது.

அவசரகால வருமானம் (Reddito di emergenza)

வேறு சலுகைகள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப வருமானம் 6,000 யூரோவிற்கும் குறைவாக இருக்கும் அனைவருக்கும் அவசரகால வருமானம் நிறுவப்பட்டுள்ளது. மாதாந்திர கொடுப்பனவு 400 யூரோக்கள் முதல் அதிகபட்சம் 800 யூரோக்கள் வரை இருக்கும். மேலும், இது மூன்று மாதங்கள் வரை வழங்கப்படும்.

Reddito di cittadinanza விரிவாக்கப்பட்ட அளவுருக்கள்

Reddito di cittadinanza பெறுவதற்கு Isee அளவு குறைந்தபட்சம் 10 000 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பின் 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் யூரோக்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு 6 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், Naspi, disoccupazione மற்றும் reddito di cittadinanza போன்ற சமூக பொருளாதார சலுகைகள் பெறுபவர்கள் விவசாயத் துறைகளில் அதிகபட்சம் 30 நாட்களுக்கு வேலை செய்யமுடியும். சலுகைகளை இழக்காமல் மேலும் 30 நாட்கள் புதிப்பிக்கப்படலாம்.

உங்கள் கவனத்திற்கு