Di Maio, சீனா எமது நட்பு நாடு, ஆனால் Natoவின் மதிப்புக்கள் எமதுமாகும்
இத்தாலி சொந்தமாகச் சிந்திக்கிறது. பல இறப்புக்களை சந்தித்த அவசரநிலையை நிர்வகிக்க பெறப்பட்ட உதவிகளுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வெளியுறவு அமைச்சர் Di Maio, Corriere della Sera பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். பேட்டியின் சில தொகுப்புக்கள் இங்கே:
ஒரு ஆய்வகத்தில் இருந்து தப்பிய COVID-19க்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா கூறுகிறது. சீனா குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது. இதில் யார் சரி?
“நான் இந்த விடயத்திற்குள் இறங்க விரும்பவில்லை, Washingtonன் கவலைகளையும், அமெரிக்க உளவுத்துறை மற்றும் அவர்களின் நிபுணர்களால் எடுக்கப்பட்ட நிலைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த சூழ்நிலைகளில் செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான விடயம் அறிவியலை நம்புவது என நான் நினைக்கிறேன். விஞ்ஞானத்தால் மட்டுமே நமக்கு பதில்களைத் தர முடியும், மேலும் வைரசின் தோற்றம் குறித்த இந்த விவாதம் ஒரு குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான இறுதி நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடாது, ஆனால் தொற்றுநோய் போன்ற வேறுபட்ட அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்கும் போது எதிர்காலத்தில் நம்மை எவ்வாறு சித்தப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்”.
இருப்பினும், வைரசு பரவுவது தொடர்பாக Pechinoவின் வெளிப்படைத்தன்மை இல்லாததாக மற்ற நாடுகள் சந்தேகிக்கின்றன. இவ்வாறு பிரான்சு, ஐக்கிய ராச்சியம் ஜேர்மனியும். உங்கள் கருத்து? “வெளிப்படைத்தன்மை என்பது, குறிப்பாக சர்வதேச உறவுகளில், ஒரு முக்கியமான விடயமாகும். எனது அனைத்து வெளிநாட்டு உரையாசிரியர்களுக்கும் சுகாதார நெருக்கடி தொடங்கியபோது, இத்தாலி அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று நான் உறுதியளித்தேன். நாங்கள் அதையே செய்துக்கொண்டிருக்கின்றோம். இயல்பாகவே எங்கள் நட்பு நாடுகளிடமிருந்து ஒரே வெளிப்படைத்தன்மையைக் கேட்கிறோம்”.
Missouri போன்ற சில அமெரிக்க மாநிலங்கள் சீனா மீது வழக்குத் தொடுத்துள்ளன. Lombardiaவும் இதற்கான நடவடிக்கைகளை மதிப்பிடுகின்றது.
“New York போன்ற ஏனைய மாநிலங்கள் சீனா வழங்கிய உதவிக்கு நன்றி கூறுவதையும் நாம் பார்த்தேன். ஆனால் விடயம் இதுவல்ல, கிழக்கு மற்றும் மேற்கு இடையிலான மோதலில் ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் கலைக்க முடியாது, நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமை உள்ளவர்கள் எப்போதும் தேசிய நலன் என்ற ஒரு தெளிவான கருத்தை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இத்தாலி Natoவிலும் (வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு) ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுதியாக உள்ளது என்பது எங்களுக்கு ஒரு பழக்கம் என்பதால் அல்ல, அது ஒரு மூலோபாய ஆர்வத்தை கொண்டுள்ளது என்பதால். பின்னர் நட்பு நாடுகளுடன் நாங்கள் வெளிப்படையாக பேசுகிறோம். இவற்றில் பிரான்சு மற்றும் ஜேர்மனியுடன் பல்வேறு துறைகளில் மிக நெருக்கமான வணிக உறவுகளை வைத்திருக்கும் சீனாவையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்”.
பல பார்வையாளர்களுக்கு, Pechino மற்றும் Moscaவுடன் அரசாங்கம் ஒரு இணைப்பை ஆதரிக்கிறது போல் தெரிகிறது. அமெரிக்க உதவிகளை விட சீன அல்லது உருசிய உதவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக உங்களை குற்றம் சாட்டுபவர்களும் உள்ளனர்.
“அமெரிக்கா எங்கள் முக்கிய நட்பு நாடு. வணிக மற்றும் மதிப்பு அடிப்படையில் அமெரிக்காவுடன் நாங்கள் நிறைய பகிர்ந்து கொள்கிறோம். எமது பிரதம அமைச்சர் Conte அமெரிக்க சனாதிபதியுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருக்கிறார், அதை போல் Mike Pompeoவுடனும் நான் அதே நல்லுறவைப் பராமரிக்கிறேன். இவை உண்மைகள். வெளியுறவுக் கொள்கைக்கும் நமது மக்கள் அதிகளவில் இறந்த இவ் அவசரகாலத்தில் பெறப்பட்ட உதவிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இத்தாலி ஒரு வலுவான, தன்னாட்சி நாடு. தனக்கு உதவி செய்யப்படும்போது ஒரு நாட்டிற்கு நன்றி கூறுகின்றது, ஆனால் தன்னை எவ்வித நிபந்தனைக்கும் உட்படுத்த அனுமதிக்கவில்லை. வேறு எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் இந்த விவாதம் எழவில்லை. அதிபர் Angela Merkel கூட பலமுறை சீனாவிற்கு சென்று வந்துள்ளார், அவர் சீன சார்புடையவர் என்று யாரும் குற்றம் சாட்டவில்லை”.
ஆனால் Belt and road திட்டத்தில் (உலக பொருளாதாரத்தில் சீனாவை ஆழமாக ஒருங்கிணைக்க சீன அரசாங்கம் விரும்பிய வணிக மேம்பாட்டு திட்டம்) கையெழுத்திட்ட அமைச்சர் நீங்கள். இது குறித்து உங்கள் கருத்து?
“2017ல் Belt and Road திட்டத்தின் முதல் பதிப்பில் இத்தாலி பங்கேற்றது. இதன் மூலம் இத்தாலியின் உற்பத்திக்காக புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்க முடியும். 2017ல் ஏன் இன்றைய அதே ஊடக விவாதம் எழவில்லை? நான் மீண்டும் சொல்கிறேன்: எமது குறிக்கோள் தேசிய நலன் ஆகும். அமெரிக்கா மற்றும் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து, உருசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிற நட்பு நாடுகளுடன் வணிக ரீதியான உறவைப் பேணுகிறோம். இதில் பிரச்சினை எங்கே என்று எனக்குத் தெரியவில்லை”.
சர்வதேச பதட்டங்கள் வளர்ந்தால், இத்தாலியின் மூலோபாயம் என்னவாக இருக்கும்?
“அவை அதிகரிக்காது என்று எதிர்பார்க்கின்றோம். இச் சூழ்நிலையில் உலகம் பிளவுப்படாமல் ஒன்றுபட்டு நிற்பதுவே விரும்பத்தக்கது”.
ஜேர்மனி அரசியலமைப்பு நீதிமன்றம் “Quantitative easing” (முதலீட்டு ஆதரவை வழங்குவதற்காக ஒரு மத்திய வங்கி பணத்தை உருவாக்கி பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் அறிமுகப்படுத்தும் முறை) குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“இது ஒரு முக்கியமான விடயம். ஆனால் ஒரு முக்கிய கேள்வியும் எழும்புகிறது: ஐரோப்பா தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறதா, அதன் திட்டத்தை நம்புகிறதா? இதற்கான பதிலில் எங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது. உள்நாட்டுப் பொருளாதாரம் சம்மந்தமான விதிமுறைகளை நிர்வகிப்பதன் மூலம் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சிந்திக்க முடியாது. இது ஒரு பொதுவான சவால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”.