Tampone மற்றும் இரத்த பரிசோதனைகள்: யாரிடம் கேட்கப்பட வேண்டும்?
எனக்கு COVID-19 தாக்கியுள்ளதா அல்லது கடந்த மாதங்களில் தாக்கியிருந்தும் இன்னும் நான் அதை அறியாமல் இருக்கிறேனா, நோயுறுதிப்படுத்தல் சோதனை (tampone) அல்லது தெளியவியல் (test sierologici) சோதனை செய்வதா என்பன தற்போது மக்கள் மத்தியில் எழும்பக்கூடிய கேள்விகளாக உள்ளன.
Tampone எனப்படும் நோயுறுதிப்படுத்தல் சோதனை முக்குத்தொண்டை பகுதியில் காணப்படும் சளியினை பரிசோதனை செய்வதன் மூலம் அந்த நேரத்தில் வைரசு தாக்கியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். Test sierologico எனப்படும் தெளியவியல் சோதனை மூலம் கொரோனாவைரசுக்கு உள்ளாகியிருந்தோமா, அதற்குரிய பிறபொருளெதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்று அறிந்து கொள்ள முடியும்.
அனைத்து பிராந்தியங்களுக்கும் தொடக்கப் புள்ளி ஒன்றுதான்: “நோயை உறுதி செய்வதற்கான tampone சோதனை சுகாதார அமைப்பின் பொறுப்பின் கீழ், உள்ளூர் சுகாதார நிறுவனம் (Asl) அல்லது மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படுகிறது” என்று உயர் சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
தெளியவியல் சோதனைகள் என்று அழைக்கப்படுபவை சில நிபந்தனைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் முடிவுகள் மிகவும் நம்பகமானவை அல்ல, ஏனென்றால் அவை மிக சமீபத்தில் தாக்கப்பட்ட தொற்றுநோய்களைக் கண்டறிவதில்லை. எனவே, பரிசோதனைகளின் முடிவுகள் tampone சோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இத்தாலியில் நாம் எங்கு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து வெவ்வேறு விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டும்.
Lombardia வில் வீட்டிலிருந்தபடி tampone செய்துகொள்ளலாம். தொற்றுநோயின் உச்சக்கட்ட மாதங்களில் இந்த tampone பரிசோதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வேளையில் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால், இனி Lombardia வில் திங்கள் முதல் COVID-19 அறிகுறிகள் உள்ளவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படாதவர்கள் கூட tamponeக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளலாம். அறிகுறிகளைக் கொண்ட நெருங்கிய உறவுகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இது பொருந்தும். குடும்ப மருத்துவர் அதை பரிந்துரைக்கலாம். இந்த நடவடிக்கை, நேற்று மாலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
«இனிவரும் நாட்களில், Lombardia மாநிலமானது உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மூலம் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனைகள் செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும். குடும்ப மருத்துவர் நோயாளியை இனம்கண்டு தெரிவிப்பார். அதன் பின்பு, குடிமக்கள் தங்களுக்கு சுட்டிக்காட்டப்படும் மருத்துவமனைக்குச் செல்ல அழைக்கப்படுவார்கள். பாதுகாப்பாக செல்லக்கூடிய நிலையில் இல்லாதவர்கள், தொடர்ச்சியான பராமரிப்பு சிறப்பு பிரிவுகளின் (Usca) மூலம் வீட்டிலேயே பரிசோதனைக்குரிய சாதனங்களைப் பெறலாம்» என துணை ஆளுநர் Gallera தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நாளில் 30 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்வதே நோக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், Lombardia போலவே வேறு மாநிலங்களிலும் இதே போன்ற பரிசோதனைகள் தீவிரமாக்கப்படும். குணமடைந்தவர்களுக்கும் COVID-19 நோய் உறுதிப்படுத்தப்படும்.
Emila Romagna வில் வசிப்பவர்கள் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, அறிகுறிகள் இருப்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் ஒரு tampone சோதனையை பெறலாம். ஏப்ரல் 24 ஆம் திகதியிலிருந்து, அறிகுறிககளைக் கொண்டுள்ள நெருங்கிய உறவுகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கூட பரிசோதனையை இப்போது குடும்ப மருத்துவர் பரிந்துரைக்க முடியும். ஒரு நாளில் 15 ஆயிரம் tamponi களை எட்டுவதே இதன் நோக்கம், இது தற்போதைய அளவை விட மூன்று மடங்கு அதிகமாக்கப்படுகிறது.
Veneto மாநிலத்தில் தொற்றுநோயின் ஆரம்பகாலத்திலிருந்தே COVID-19 இனால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறியுள்ளவர்கள், அறிகுறியற்றவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சுகாதார நிலையங்களினதும் செயற்பாட்டில் உள்ள தொலைபேசி இலக்கமூடாகவும் அல்லது குடும்ப வைத்தியர் மூலமாகவும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றுவரை Veneto வில் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் tamponi வரை செய்யப்படுகின்றன. செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு நாளில் 50 ஆயிரத்தை எட்டுவதே நோக்கமாக உள்ளது.
கட்டணம் செலுத்திக் கூட தெளியவியல் பரிசோதனைகள் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள முடியும். ஆனால், அச்சோதனைகளின் முடிவில் COVID-19க்கு உள்ளாகியிருந்தால் tampone பரிசோதனை மேற்கொள்ள குடும்ப வைத்தியரைத் தொடர்புகொள்ள வேண்டும்.