கட்டம் 2க்கு வல்லுநர்களின் பரிந்துரைகள்

Bar, கடற்கரை, நண்பர் வீடு, மேசைகளுக்கிடையில் ஒரு மீட்டர் தூரம். நாம் பாதுகாப்பாக உணர முடியுமா? வைரசு, தொற்றுநோய் மற்றும் சுகாதார நிபுணர்கள் மூவர் மே 18 இன் விதிகளை தளர்த்துவது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

பிராந்தியங்களிடையே நிலைமை சீரற்றதாக இருப்பதையும், மூடிய இடங்களுக்கும் திறந்த இடங்களுக்கும் இடையில் ஆபத்து வேறுபாடு மிகப் பெரியது என்பதையும் நியாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

உணவகம்

மக்களிடையே ஒரு மீட்டர் தூரத்தைக் கடைப்பிடிப்பது குறைந்தபட்ச வைரசின் பரவலைத் தடுப்பதாகக் கருதப்படுகிறது.  «நாங்கள் சந்திக்க இருக்கும் அபாயத்தைப் புரிந்துகொள்வது தான் விடயம்» என்று Milanoவில் உள்ள San Raffaeleயின் சுகாதாரப் பேராசிரியர் Carlo Signorelli விளக்குகிறார்.  “பாதிக்கப்பட்ட நபரின் சுவாசத் துளிகளின் பரவுதல் ஒரு மீட்டருக்குள் மிக அதிகமாக உள்ளது. இது ஒன்று முதல் இரண்டு மீட்டர் வரை குறைவாக உள்ளது. இரண்டு மீட்டருக்கு அப்பால் மிகக் குறைவு”. பாதிக்கப்பட்ட நபர் இருமினால், தும்மினால், பேசினால் அல்லது வெறுமனே சுவாசித்தாலும் கூட இது நிகழ்கிறது.

Milano பல்கலைக்கழகத்தின் வைரசு நிபுணர் Carlo Federico Perno, ஒவ்வொரு பிராந்தியத்தின் தொற்றுநோய்களின் நிலைமையை மதிப்பீடு செய்ய வலியிறுத்துகின்றார்:  «Lombardiaவில், உட்புறத்தில், மேசைகளுக்கிடையில் ஒரு மீட்டர் தூரம் போதுமானதாக இல்லை. இரண்டு மீட்டர் தேவை. திறந்தவெளியில் பரவுதலின் ஆபத்து மிகக் குறைவு. ஆகையால் ஒரு மீட்டர் தூரம் போதுமானது».

கடற்கரை

இந்த வைரசு மணலிலோ, தண்ணீரிலோ, மலைப்பாதைகளிலோ பரவாது என்று Perno விளக்குகிறார்.  «தரவுகளிலிருந்து மூடிய இடங்களில், குறிப்பாக சுகாதார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பெரும்பாலான தொற்றுதல்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். கடற்கரைக் காற்று, குறிப்பாக, வைரசைக் கலைப்பதில் பெரும் விளைவைக் கொண்டுள்ளது». நீச்சல் குளங்களில் உள்ள குளோரின் நுண்ணுயிர்களை செயலிழக்க போதுமானது. மேலும் சூரியனால் கொரோனா வைரசின் உயிர்வாழ்வு வெகுவாகக் குறைகிறது.  «தொற்றுநோய் ஒரு பருவகால போக்கை தெளிவாகக் காட்டுகிறது. கோடை காலம் இதற்கு உதவுகிறது. எங்களிடம் தொற்றுநோய் குறைந்து தென் அமெரிக்காவில் அதிகரிப்பது இதற்கு ஒரு உதாரணம்» என Signorelli கூறியுள்ளார்.

நண்பர்கள் வீடு

இது மிகவும் நிதானமான சூழ்நிலை என்றாலும் தொற்று ஆபத்து காரணமாக நயவஞ்சகமானது.  «கட்டுப்பாடுகளை அங்கும் நாங்கள் முன்கூட்டியேே கண்காணிக்க முடியாது. நண்பர்களுடனான சந்திப்புகளின் போது, ​​மக்கள் முகக்கவசங்களை அணிவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் முடக்கநிலை காலத்தில், 30% நோய்த்தொற்றுகள் வீட்டுச் சூழலில் தான் ஏற்பட்டிருந்தது» என்று Signorelli நினைவுப் படுத்துகின்றார்.
«நாங்கள் சந்திக்கச் செல்லும் நண்பருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் அவரே அவருக்குத் தெரியாமல் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் நண்பர்கள் கூட நோயின் பார்வையில் ஒரு எதிரி என்பதை நிரூபிக்க முடியும்» என Perno கூறியுள்ளார்.

உடற்பயிற்சி நிலையம்

 «நான் மீண்டும் திறக்க விரும்பிய கடைசி இடம் இதுதான். உடற்பயிற்சி செய்யும் போது, நுரையீரலில் இருந்து காற்று அதிக தூரத்திலும், இயல்பை விட மூன்று அளவிலும் வெளியேற்றப்படுகிறது». உடற்பயிற்சி நிலையங்களில் எப்போதும் நல்ல காற்று பரிமாற்றம் இல்லை என்று Perno கூறுகின்றார்.

பூங்காக்கள்

வெளிப்புறங்களில், தொற்றுநோய்க்கான ஆபத்து ஏறக்குறைய கூட்டங்கள் கூடுவதுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளில், குழந்தைகளுக்கிடையில் மிக நெருக்கமான சந்திப்புகள் ஏறுபடுவது ஆபத்தாகவே இருக்கின்றது. மிக இளம் வயதினருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதை நாங்கள் கண்டோம், ஆனால் அவர்கள் வைரசை அறிகுறியின்றி பரப்ப முடியும். இரண்டு குழந்தைகளை ஒரு விளையாட்டில் அல்லது ஒரு மர வீட்டிற்குள் தொலைவில் வைத்திருப்பது கடினம். ஆனால் அபாயங்களைத் தவிர்க்க விரும்பினால் அது செய்யப்பட வேண்டும் என Signorelli மற்றும் Perno விளக்குகின்றனர்.

காற்றுச்சீரமைப்பி (aria condizionata)

இயற்கையான காற்றோட்டம் விரும்பத்தக்கது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் காற்றுச்சீரமைப்பிகள் மூலம் வைரசு பரவும் ஆபத்து குறைவாக கருதப்படுகிறது.  பாதிக்கப்பட்ட சூழலில் நுண்ணுயிரிகள் காற்றில் இருந்து காற்றோட்டக் குழாய்கள் வழியாக வேறொரு சூழலுக்கு அனுப்பப்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு. COVID-19க்கான மருத்துவமனைப் பிரிவுகளில் காற்றில் வைரசுகளின் செறிவு மிகவும் உயர்வாக இருந்தது. வீட்டிலோ அல்லது நெரிசலான இடங்களிலோ காற்றுச்சீரமைப்பியை நிறுத்தி வைப்பதற்கு எந்த பரிந்துரைகளும் இல்லை.

கையுறைகள்

உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை மீண்டும் திறக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக கையுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் அழுக்கு கையுறைகள் வெறும் கைகளை விட மிகவும் ஆபத்தானவை.  «நாங்கள் அவற்றை காலையில் போட்டு, மாலையில் கழற்றி, எங்கள் முகங்களையும், வெவ்வேறான மேற்பரப்புகளையும் தொட்டால், நுண்ணுயிரிகளின் மிகவும் சுகாதாரமற்ற செறிவு இருக்கும்» என்று Perno விளக்குகிறார். ஆகையால், கையுறைகள் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.

முகக்கவசங்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முகக்கவசங்கள் தான் அதிகளவில் பாதுகாப்பாக அமைகின்றன. நாம் வீட்டிற்குள் இருக்கும்போதும், பாதுகாப்பு தூரம் ஒரு மீட்டருக்கு குறைவாக இருக்கும்போதும், முகக்கவசங்கள் நம்மைக் காப்பாற்றும்.  «இரண்டு நபர்கள் இதை சரியாக அணிந்தால், ஒருவர் மற்றவருக்கு தொற்று ஏற்படுத்தக்கூடிய ஆபத்து 95%ஆக குறைகிறது» என்று Signorelli விளக்குகிறார்.

Lopalco பொறுத்தவரை  “குறிப்பாக பொது போக்குவரத்தில் முகக்கவசங்கள் மிக முக்கியமானவை. நண்பர்களைச் சந்திக்கும் போது அவர்களின் வீட்டிற்கு செல்லும் போதும் இவற்றை அணிய வேண்டும். இந்தச் சூழ்நிலையில், மக்களின் பொது அறிவை நம்புவதைத் தவிர வேறு எந்த முறையும் இல்லை”. மக்களுடைய பொது அறிவே இவ் இரண்டாம் கட்டத்திற்கு முக்கிய அம்சமாக அமைகின்றது.

உங்கள் கவனத்திற்கு