இலையுதிர்காலத்தில் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம் – Brusaferro
தற்போது இத்தாலியில் பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகள் குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் அதே வேளையில், அடுத்த புதன்கிழமை, ஜூன் 3 முதல், இத்தாலிய எல்லைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Silvio Brusaferro மீண்டும் அனைத்தும் திறக்கப்படுவது சார்ந்து ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவை மிக முக்கியமான சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் « இலையுதிர்காலத்தில், Sars-Cov-2 போன்ற ஒரு நோய் மிகவும் பரவலாக ஏனைய சுவாச நோய் அறிகுறிகளுடன் ஒத்து இருக்கலாம்” மற்றும் “நோய்த்தொற்றின் இரண்டாவது கட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு தொழில்நுட்ப விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட குறிக்கோள்». எனவே, “இலையுதிர்காலத்தின் வருகையுடன்” கொரோனாவைரசின் அதிக பரவலுக்கான வாய்ப்பு உள்ளது ” என்று அவர் எச்சரித்துள்ளார்.
இலையுதிர்காலத்தில் புதிய கொரோனா வைரசின் பரவலும் அவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து குறித்து, Brusaferro மேலும் விளக்கினார்: «பாரம்பரியமாக இலையுதிர்காலம், ஆதாவது அக்டோபர் மாதத்திலிருந்து, சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகள் பரவுகின்ற பருவம். அதற்கு காய்ச்சல் தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் பருவம், சுவாசப்பாதைகள் வழியாக வைரசுகள் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் பருவம். எனவே, அந்த பருவத்தை நாம் அணுகும்போது அதிக பரவலுக்கான சாத்தியங்கள் உள்ளது என்பது தெளிவாகிறது».
மேலும், கொரோனாவைரசு “மறைந்துவிடவில்லை” மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் “மிக விரைவாக பரவக்கூடிய புதிய தொற்றுக்களின் வருகைக்கு” நாங்கள் தயாராக வேண்டும் என்று COVID-19 க்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) சிறப்பு தூதர் David Nabarro இன்று B.B.C வானொலியில் தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் முடக்குநிலை நடவடிக்கைகள் படிப்படியாக அகற்றப்பட்டாலும், ஐ.நா. முகமை பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், முடிந்தவரை சமூக இடைவெளியைத் தொடரவும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்தவும் மக்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.