ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு
இப்பூமிப்பந்தில் தொன்மையும் செழுமையும் மிக்க மொழியை தம் தாய்மொழியாகவும் மிக உயர்ந்த நீண்ட வரலாறு கொண்ட கலாசார பண்பாட்டு சமூக வாழ்வையும் தன்னகத்தே கொண்ட மக்கள் கூட்டத்தின் வழிவந்தவர்களே ஈழத்தமிழ்மக்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இன்று தம் மூதாதையர் காலம்காமாக பல ஆண்டுகளாக வாழ்ந்த தம் தாயகத்திலும் பரந்த இவ்வுலகின் பல பாகங்களிலும் ஏதிலிகளாகவும் தமது அடிப்படை வாழ்வுரிமை தாயகத்தில் மறுக்கப்பட்டுமே வாழும் நிலை!
இதற்கு தமிழ் அரசியல் தலைமைகளின் தன்னல போக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் தொடர்ச்சியான சூழ்ச்சிகளுமே கரணியங்களாக அமைகின்றன கடந்த எழுபதாண்டுகால வரலாறு இதையே காட்டி நிற்கின்றது.
இவ்வரலாற்றில் ஈழத்தமிழ்மக்கள் கற்றுகொண்ட பாடங்களிலிருந்து உருவானதே ஈழவிடுதலைப்போராட்டம் மிக உன்னதமான தலைமையின் வழிகாட்டலில் எண்ணற்ற மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் தம்மினத்தின் இருப்பிற்க்காகவும் விடுதலைக்காகவும் இடம்பெற்ற இத்தியாகவேள்வி உலக வல்லரசுகளின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாண்மைப்போட்டிகளால் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்பட்டது தமிழ்மக்கள் மிகப்பெரிய இனவழிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர்
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சர்வதேச சமூகத்தின் முன் நீதி வேண்டி தமிழ்த்தேசியத்தின் பால் அக்கறை கொண்ட புலம்பெயர்தேசத்து கட்டமைப்புக்கள் தாயக அரசியல்கட்சிகள் பொதுஅமைப்புக்கள் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளுக்கும் சிங்களதேசம் தனது தமிழ் அடிவருடி அரசியல்வாதிகள் துணைகொண்டு முட்டுக்கட்டை போட முனைகின்றது.
தம்மையும் தமது வரலாற்றையும் அறிந்து கொள்ளாத எந்த இனமும் தம்மை வரலாற்றிலிருந்து தொலைத்ததையே மானுட வரலாறு காட்டி நிற்கின்றது.
இதையுணர்ந்து எம் இளையோர்களுக்கு இவற்றை எடுத்து செல்வதும் எமது கடமையாகும் தற்போதைய தாயகத்து அரசியல் களத்திற்கும் இனியும் ஈழத்தமிழர்கள் ஏமாறாமல் இருக்க இன்றிமையாத சுருக்கமான தமிழீழ கல்வி கழகத்தினால் 2001ம் ஆண்டு தமிழீழ மாணவர்கள் இளையோர் நலன் கருதி வெளியிடப்பட்ட “வரலாறு சொல்லும் பாடம்” என்னும் அரிய நூலிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு வரலாறு பகுதிபகுதியாக இங்கே தரப்படுகின்றது.