கறுப்பு ஜூலை – இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும்.
23 ஜூலை 1983 ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருண்ட தருணமாகவும் அமைந்திருந்தது.
சிங்கள பேரினவாத அரசு மற்றும் காவல்துறையினரின் ஆதரவோடு சிங்களவர்களால் தமிழ் மக்கள் உயிருடன் எரியூட்டப்பட்டதும், உடைமைகள் அளிக்கப்பட்டதும் போன்று பல மிகக் கொடூரமான வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இக் கலவரத்தின் போது 3000 தமிழர்கள் கொல்லப்பட்டும், 25000 தமிழர்கள் காயப்பட்டும், 15000 தமிழர்கள் வீடிழந்தும், 8000 தமிழ் வியாபார நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.
மேலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற இதுவே காரணியாகவும் இருந்தது.
இன்றுடன் கறுப்பு ஜூலை நடந்தேறி 37 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு எமது தமிழ் இளையோர்கள் பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜூலைக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டோர், சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களின் அனுபவங்கள் உணர்வுகள் மற்றும் வாக்குமூலச் சான்றுகளை சிறிய கலந்துரையாடல் மூலம் சேகரித்து வருகின்றனர். இந்தத் திட்டம் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் இளையோர்களுக்கு கொண்டுசேர்க்கும் நோக்கோடும் சாட்சியங்களை ஆவணப்படுத்தும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
1983 நடைபெற்ற கலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வினை Silhouette எனும் நுட்பத்தினால் மீள் உருவாக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், கறுப்பு ஜூலையினை பிற மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கோடு சிறிய காணொளி ஒன்றும் தயாரிக்கப்பட்டது.