கறுப்பு ஜூலையின் நீங்காத நினைவில் – பாகம் 2
சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது 1983ல் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில் எமது மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து, நாளுக்கு நாள் தங்கள் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் அஞ்சி, பிறந்து வளர்ந்த மண்ணில் நிம்மதியாக, சந்தோசமாக வாழ முடியாத ஒரு கொடூரமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தில், ஓரிருத்தினங்களில், சிங்களக் காடையர்கள், எமது மக்களை தேடித் தேடி கொத்துக் கொத்தாக கொன்று குவித்தனர். அந்த வலிகளை நெஞ்சில் சுமந்த வண்ணம் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்கள் ஏறாளமானவர்கள். எமது தமிழ் மக்கள் அனுபவித்த அந்த இன்னல்களை நேரில் பார்த்தவர்கள், நேரடியாக அனுபவித்தவர்களின் சாட்சியங்கள் எங்களுக்கு பெரும் செல்வமாக திகழ்கின்றன. அவ் வகையில், புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழ் இளையோர்களுக்கும் அந்த சாட்சியங்களை தெரிவித்து ஜூலைக் கலவரத்தின் கொடூரச் சம்பவங்களை நினைவு கொள்வதற்காகவும் எம் தமிழ் உறவுகள் சிலர் தங்களுடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றின் ஒரு பதிவு இங்கே.