கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பும் தமிழர் பிரதிநிதித்துவமும்.
மனிங் செய்த இவ் அரசியற் சீர்திருத்தங்களினால் அதுவரை சட்டசபையில் ஒரளவு சம்பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த தமிழருக்குப் பெருந்தீங்கு விளைந்தது. சிங்களவருக்கு 13 பிரதிநிதுத்துவத்தை அள்ளி வழங்கிய அச்சீர் திருத்தம் தமிழருக்கு 3ஐ மட்டுமே விட்டு வைத்தது. 1920 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இனக்கூறுபாடு (இனவிகிதாசாரம்) பேணப்படவேண்டும் எனவும், குறைந்தது சிங்களவர் தொகையின் 2/3 பங்காவது தமிழர் பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமெனவும் தமிழர்கள் வற்புறுத்தினர்.
மேல்மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய, அம்மாகாணத்தில் ஒரு தமிழ்ப் பிரிநித்துவம் வழங்க வேண்டுமெனவும் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நேரத்திலே தான் சிங்களவர் தமிழருக்குச் செய்த முதலாவது நம்பிக்கை மோசடி நிகழ்ந்தது. 1919 டிசம்பர் 14 இல் உருவான இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பின் முதல் தலைவராக விளங்கியவர் சேர். பொன். அருணாச்சலம் அவர்கள். மானிங் அரசியற் சீர்திருத்தத்தின் மூலம் தமிழர்களின் பிரதிநித்துவம் குறைக்கப்படுவதை இலங்கைத் தேசிய காங்பிரசிலிருந்து சிங்களத்தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை.