தமிழர் பெருமையின் சின்னம்: தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சைப் பெரிய கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொன்மை என தமிழர் பெருமையின் சுரங்கமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோவிலை 1987ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது UNESCO ( ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு).
இக் கோவிலுக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டன, அவையாவன: தஞ்சைப் பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஐராவதேசுவரர் கோவில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்.
இவ் ஆலயத்தின் கட்டிடப் பணி முதலாம் ராஜ ராஜ சோழனின் 19ஆம் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து 25ஆம் ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது. அதாவது, சோழ மன்னரின் ஆட்சியின் போது 10ஆம் நூற்றாண்டில் ( 1004 D.C. -1010 D.C.) கட்டப்பட்டது.
இதில் தலைமை கட்டிடக் கலைஞனாக குஞ்சர மன்னன் விளங்கினார். இவருக்கு “ராஜ ராஜ ராம பெருந்தச்சன்” என்ற சிறப்புப் பெயர் மன்னரால் பெயர் சூட்டப்பட்டது.
தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலின் நீளம் 150 அடியாகவும், கோபுரத்தின் உயரம் 190 அடியாகவும், அடிப்பாகத்தின் உயரம் 16 அடியாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக மிக உயரமான கோபுரமாக தஞ்சை கேரளாந்தகன் எழுப்பப்பட்டது. இதன் பிற்பாடாகவே மற்றைய மன்னர்களும் உயரமான கோபுரங்களை எழுப்பத்தொடங்கினர். இக் கோபுரத்தின் அடுக்குகளில் சிவனுடைய 108 கூத்து நிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பெரிய கோவிலின் கோபுர உச்சியில் கலசமாக அமைந்திருக்கும் 81 டன் எடை உள்ள கல் ஒரே பாறைக் கல்லால் செதுக்கப்பட்டமை இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்திற்கே சவால் விடும் விடயமாக அமைந்திருக்கின்றது.
இதேபோல் நந்திச் சிலையும் ஒரே கல்லினால் அமைக்கப்பட்டது. இச் சிலை 20டன் எடையும் 2m உயரமும் கொண்டது. கோவிலில் உள்ள சிவலிங்கமானது 4m உயரத்தைக் கொண்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் முனிவர்களையும், இந்துக் கடவுள்களையும், புராணக் கதைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன.
இக் கோவிலைக் கட்டுவதற்கான கற்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. அக் கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்தன; செதுக்கிய கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆகையால், இக் கோவிலைக் கட்டுவதற்கு 35 ஆண்டுகளை ராஜ ராஜ சோழன் செலவழித்தார்.
பெரிய கோவிலுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள பல ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதாவது, தமிழில் 216 உயிர்மெய் எழுத்துக்கள் இருப்பது போல் கோவிலும் 216 அடி உயரத்தைக் கொண்டது; அது மட்டும் இன்றி 12 உயிர் எழுத்துக்களைப் போல் சிவலிங்கம் 12 அடி உயரமானது; தமிழ் மொழி 18 மெய் எழுத்துக்களைக் கொண்டது போல் சிவலிங்கப் பீடத்தின் உயரம் 18 அடியாகும்; தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்களைப் போல் சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தூரத்தைக் கொண்டது. இதன்மூலம் தஞ்சைப் பெரிய கோவில் வெறும் வழிபாட்டுத் தளமாக மட்டும் இன்றி அறிவுக் களஞ்சியமாகவும் செயற்பட்டதை அறியமுடிகிறது.
ஆய்வாளர்கள் எகிப்த்திய பிரமீடுகளுக்கும் இவ் ஆலயத்திற்கும் ஒரே கட்டுமாண முறை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதாவது, இரண்டு கட்டிடங்களையும் கற்களை அடிக்குயும், கோர்த்தும் அமைத்துள்ளார்கள் என்ற விடயம் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
பெருவுடையார் ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தலைக்கு 1 வேலி வீதம், 400 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது. மேலும் முதல் மறையாக ஆலயத்தின் கருவறைக்குள் பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
சோழ மன்னரின் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400 தேவதாசிகள் இருந்ததாக அறியமுடிகிறது. மேலும் கோவில் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இக் கோவிலைக் கட்டுவதற்காக பல தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்தை ராஜ ராஜ சோழன் தட்டிப் பறித்ததாக கருதப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, அவரது ஆட்சியில் சாதி ரீதியாக ஒடுக்குமுறை ஆரம்பித்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழரின் அடையாளம், தமிழ் கட்டடக் கலையின் பெருமிதம், பிரம்மாண்டத்தின் வெற்றி, பேரரசன் ராஜ சோழனின் தனிப் பெரும் சின்னம் என்று பல பெருமைக்குரிய அடையாளங்களைக் கொண்டது தஞ்சைப் பெரிய கோவில்.