மண்ணில் இடிக்கப்பட்டது மாணவர்கள் மனங்களில் கட்டப்படுகின்றது – AUDIO நேரடி சாட்சி
தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அடக்குமுறை எல்லையற்ற முறையில் தொடர்கின்றது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை உலக நாடுகள் முன்னிலையில் மூடி மறைத்து தமிழர்களின் இருப்பையே இல்லாதொழிக்க நினைக்கும் சிங்கள அரசின் இன்னொரு திட்டமிட்ட வன்செயல் தான் கடந்த நாட்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக, சனவரி 8 அன்று, யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபியானது இடித்து அழிக்கப்பட்டுள்ளது. தமிழ்ர்களுடைய உரிமைகளைப் பறித்து, தமிழ்ர்களுக்கென்ற ஒரு அடையாளத்தை மறுத்து, போராட்ட வரலாறை நினைவுகூரும் நினைவிடங்களை அழித்து தமிழர்களின் வாழ்வையே அன்றிலிருந்து இன்று வரை கேள்விக்குறியாக்க
நினைக்கும் சிங்கள இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பல தமிழ் மாணவர்களும் பொது மக்களும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் சாட்சியம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை என்பதை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாமும் தாயகத்தில் போராடும் எமது உறவினர்கள், தோழர்களுடன் சேர்ந்து சிங்கள அரசாங்கத்திற்கு நினைவூட்டுவோம், செயல்படுவோம்!