11ம் நாளாக (18.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் Basel மாநகரை வந்தடைந்தது
“தமிழீழத் தாகம் தணியாது எங்கள்
தாயகம் யாருக்கும் பணியாது”
என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்று எந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கேட்டு எமது ஈருருளிப்பயணம் பல தடைகளைத் தாண்டி தொடர்கிறது.
Colmar, France மாநகரில் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டு எமது தாரக மந்திரத்துடன் ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.
Saint-Louis, France மாநகர முதல்வருடன் ஒழுங்கு செய்யப்பட்ட நேரடி சந்திப்புடனும் தமிழீழத்தி்ல் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனவும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனவும் அனைத்துலக சுயாதீன விசாரணை மூலமே தமிழர்களுக்கு நீதியைபெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. முதல்வரினால் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு மதியநேர உணவுக்கான மண்டபமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. Saint-Louis மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயணம் Basel, Switzerland மாநகர மக்களினால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு அங்கிருந்து சுவிஸ் வாழ் இளையோர்களும் இணைந்த ஈருருளிப்பயணம் Holstein, Switzerland நகரை வந்தடைந்தது. இதுவரையும் 1150km கடந்து நாளை solothurn நகரினூடாக Bern மாநகரை வந்தடையவுள்ளது.
எமது எதிர்கால சந்ததிகள் நின்மதியான சுதந்திர தேசத்தில் வாழ அனைவரும் தம் வரலாற்று கடமையினை ஆற்ற உரிமையோடு அழைக்கின்றோம்.
“எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்”-தமிழீழத்தேசியத்தலைவர்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத்தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.