6ம் நாளாக (27.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன. அந்தவகையிலே சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளிகள் முருகதாசன்,செந்தில் குமரன் திடல்) உணவுத்தவிர்ப்பு போராட்டம் Geneva, Switzerland காவற்துறையின் ஒத்துளைப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் அவையினுடைய ஊடகவியலாளர்கள், முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மற்றும் அங்கத்துவ நாடுகளிடம் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பிரேரணையிற்கு ஆதரவளிக்ககோரியும் விடுதலை ஓர்மத்தோடு தொடர்கின்றது.
நாளை மறுதினம் ( 01.03.2021) பி.ப 2 மணிக்கு ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் பெரும் திரளாக ஒன்றுகூடி எமது நீதிக்கான எழுச்சிக்குரல் எழுப்புவோம் வாரீர் என உரிமையோடு அழைக்கின்றோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்