7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராட கடமைப்பட்டிருக்கின்றோம். 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளை பேரொழுச்சியோடு அறவழிப்போராட்டங்கள் தமிழர்களின் இலக்கு நோக்கி பலமுனைகளில் நகர்கின்றது.
கடந்த 08.02.2021 அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் ஐரோப்பிய நாடுகள் ஊடாக எமது வேணவாவினை வலியுறுத்திக்கொண்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை பாரப்படுத்தி விசாரிக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு கடந்த 21.02.2021 ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலினை 1500Km கடந்து (ஐ.நா முன்றலினை) வந்தடைந்தது.
மேலும், இன்றுவரை (28.02.2021), 7ம் நாளாக சர்வதேச ஊடகக் கவனத்தோடு உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்குன்றது.
சம நேரத்தில் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை அம்மையினால் முன்னெடுக்க பட்டுக்கொண்டிருக்கும் சாகும்வரையான உணவுத்தவிர்பு போராட்டமும், தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா தன்னை ஈகம் செய்த நல்லூர் முன்றலில் தமிழின உணர்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உணவுத்தவிர்பு போராட்டம் ஆகியன சர்வதேசத்திடம் எமது நியாயமான கோரிக்கைளை முன்வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எமது இனத்தின் விடியலுக்காக அறப்போரில் எம்மை இணைத்துக்கொண்டு தமிழீழ விடுதலையினை இலக்காக வைத்து போராட நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அந்தவகையிலே நாளை, திங்கள் (01.03.2021) ஐ.நா முன்றலில் பி.ப 2.30 மணிக்கு நடைபெற இருக்கும் பெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டு எமது எழுச்சியினையும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் சர்வதேசத்திற்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றோம். எனவே அனைத்து அன்புறவுகளையும் அவ் வரலாற்றுகடமையினை உணர்ந்து உங்கள் வருகையினை பதிவுசெய்யுமாறு உரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.