வரலாறு பேசும் பெண்ணியம்
8 மாரச், சர்வதேச பெண்கள் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகனள அங்கீகரிக்கும் நாளாகும்.
New York நகரத்தில் 1908 இல் 15000க்கும் மேற்பட்ட பெண்கள் தமது ஊதிய உயர்வுக்காகவும், வேலை செய்யும் நேரத்தை குறைப்பதற்காகவும் மற்றும் தமது வாக்குரிமைக்காகவும் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு பேரணியை நடத்தினார்கள்.
அமெரிக்கவால் மட்டும் அன்று, 8 மார்ச் பெண்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், உலகப் பெண்களே இந்நாளை தமக்கான ஓர் எழுச்சி நாளாக கருதி, தமது உரிமைகளுக்காக போராட்டங்களும், பேரணிகளும் நடாத்தி வந்தார்கள். இதை அடிப்படையாக வைத்து, 1975இல் ஐ.நா இந் நானள முழுமையாக அங்கீகரித்து, 8 மார்ச் சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
பெண்கள் காலம் காலமாக ஓர் உரிமையுள்ள மனிதராக தம்மை இந்த சமூகத்தில் நிலை நிறுத்துவதற்கு கடந்து வந்த பாதை இலகுவானது அல்ல. இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று சமூகம் பெண்களுக்கு திணித்த விதிகளையும் உடைத்து, பெண் என்பவள் வலிமையானவள், விவேகமானவள், அவள் சுயாதீனமாக வாழக் கூடியவள் என்று நிறுவினார்கள். ஒரு சில அங்கீகாரங்களை பெண் அடைந்திருந்தாலும், இந்த சமூகம் ஆண், பெண் சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்னம.
பாலின சமத்துவம் என்பது, ஆணையும், பெண்ணையும் சக மனிதர்களாக மதிப்பது தான்.
பெண்கள் தனது அன்றாட வாழ்க்கையிலும் குடும்பத்திலும், வேலையிடங்களிலும் எதிர்கொள்ளும் நெருக்கடிக்யான பழியை இலகுவாக நாம் சமூகத்தின் மேல் சாட்டி, எங்களில் பலரும் தப்பித்துக்கொள்கிறார்கள். சமூக சிந்தனைகளையும், நோக்கங்களையும் வடிவமைப்பது, இந்த சமூகத்தில் வாழும் ஒவ்வொறு மனிதனும் தான். ஆகையால், சமூக மாற்றத்திற்கான முயற்சி இங்கு வாழும் ஒவ்வொறு மனிதனின் பணி மட்டும் அல்ல, இனி வரும் வருங்கால தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட.