ஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை

ஏப்ரல் 26 முதல், பிரதமர் Mario Draghi தலைமையிலான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய Covid ஆணை, கொரோனாவைரசின் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைக்கு வருகிறது.

ஏப்ரல் 26 முதல், நீங்கள் மஞ்சள் நிற பிராந்தியங்களுக்குள் சுதந்திரமாக செல்ல முடியும்.
வெவ்வேறு நிற பிராந்தியங்களுக்கு சுயஅறிவிப்புப்படிவம் மூலம் வேலை, உடல்நலம் மற்றும் தேவை காரணங்களுக்காக மட்டுமே செல்ல முடியும் அல்லது மேற்குறிப்பிட்ட காரணங்களுக்குள் அடங்காத பட்சத்தில் “பச்சை அட்டை” (Green pass) பயன்படுத்துவதன் மூலம் நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

“பச்சை அட்டை” (Green pass) என்றால் என்ன?

தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது Covid-19லிருந்து மீண்டவர்களுக்கு அல்லது முந்தைய 48 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை (tampone) மேற்கொண்டவர்களுக்கு வழங்கக்கூடிய சான்றிதழ் இது.

இதனை பெற்றுக் கொள்வது எப்படி?
தடுப்பூசி அல்லது கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் இவை வழங்கப்படும் மையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். Covid-19லிருந்து மீண்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அல்லது குடும்ப மருத்துவரிடமிருந்து இதனை பெற்றுக் கொள்ள முடியும்.
2 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இவ் ஆணை ஏப்ரல் 26 முதல் ஜூலை 31 வரை செல்லுபடியாகும். தொற்றுநோயியல் வளைவின் போக்கை சரிபார்த்து, தொற்று குறைந்து விட்டால், நெறிமுறைகள் தளர்த்தப்படும் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஒத்திவைக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம்.

உணவகங்கள்
மஞ்சள் நிற பிராந்தியங்களில் ஏப்ரல் 26 திங்கள் முதல் மதியம் மற்றும் இரவு உணவிற்கு, வெளிப்புறத்தில், உணவகத்திற்கு திரும்ப முடியும். ஜூன் 1 முதல் மஞ்சள் நிற பகுதிகளில் உணவகங்கள் உட்புறத்திலும் ஆனால் மாலை 6 மணி வரை திறக்கலாம்.

மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் பகுதியில், அனைத்து வணிக நடவடிக்கைகளும் திறக்கப்படும். சிவப்பு பகுதியில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே திறப்பு அனுமதிக்கப்படுகிறது. Barகள் மற்றும் உணவகங்களுக்கான வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சேவை செல்லுபடியாகும். சிகையலங்கார நிபுணர்கள், அழகு மையங்கள் மூடப்பட்டுள்ளன. Centro commerciale வார இறுதி நாட்களில் மீண்டும் திறக்க முடியாது.

மஞ்சள் பகுதிகளில் அதிகபட்ச 50% நபர்களை மட்டும் உள்ளடக்கி, ஒரு மீட்டர் தூரம் கடைப்பிடித்து மற்றும் முன்பதிவு மூலம் ஏப்ரல் 26 முதல் திரையரங்குகள், உட்புற அல்லது வெளிப்புற கச்சேரி அரங்குகள் மீண்டும் திறக்கப்படும்.

விளையாட்டு
மஞ்சள் பகுதிகளில், ஏப்ரல் 26 முதல் அனைத்து விளையாட்டுகளும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் விளையாட்டு மையங்களில் உள்ள மாற்று அறைகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படுகின்றது.
மே 15 முதல் நீச்சல் குளங்கள் வெளிப்புறத்தில் மட்டும்
திறக்கப்படும், ஜூன் 1 முதல் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.
மைதானங்கள் திறக்கப்பட்டதும், ஜூன் 1 முதல் ஒரு போட்டியில் அல்லது நேரடி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்புறத்தில் ஆயிரம் பார்வையாளர்களையும் உட்புறத்தில் 500 பார்வையாளர்களையும் மட்டுமே அனுமதிக்க முடியும்.

உங்கள் கவனத்திற்கு