இத்தாலி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் 2021
ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடிய தமிழினத்தை முற்றாக அழித்து தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அஃது வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது.
தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிறீலங்கா இராணுவம் கொன்றொழித்தது. இந்த கொடூரத்தை நாம் மறந்திட முடியாத மிகவும் வேதனை மிகுந்த தமிழினப்படுகொலையின் உச்சமாகும் அந்த வகையில் 12 ஆவது ஆண்டு நினைவுகூரல் இன்று (18/5/21)ஜெனோவா, பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலைகளில் நினைவுகூரப்பட்டது.
அவற்றின் சில பதிவுகள்.