Green passஐ எப்படி பெற்றுக்கொள்வது?

ஜூன் 17 முதல் Covid-19க்கான green passஐ வழங்குவதற்காக பிரதமர் Draghi புதிய ஆணையை கையெழுத்திட்டார். ஓய்வூதிய இல்லங்களில் வயதானவர்களைப் பார்வையிடவும், ஜூன் 15 முதல் திருமண விருந்துகள், ஞானஸ்தானம் மற்றும் முதல்நன்மைகளில் பங்கேற்கவும் தேவைப்படும். விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்ளவும் இது பயன்படுத்தப்படுகிறது.

Green passஐ எப்படி பெற்றுக்கொள்வது? https://www.dgc.gov.it/web/ எனும் இணையத்தளம் 17 ஜூன் முதல் பாவனையில் உள்ளது. மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள், தொற்றுநோயிலிருந்து குணமாகியது மற்றும் கொரோனாவைரசு பரிசோதனை தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களும் ஜூன் 28க்குள் கிடைக்கும். தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் ஒரு குறியீடு (Authcode) அனுப்பப்படும். இணையத்தளத்தில் இணைந்த பிறகு, Spid வழியாக அல்லது சுகாதார அட்டை வழியாக அணுகி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, சுகாதார அட்டையை காண்பித்து குடும்ப மருத்துவர் மற்றும் மருந்தகங்கள் ஊடாக சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். Immuni செயலியின் முகப்புத் திரையில் தெரியும் “EU digital COVID certificate” என்ற பிரிவின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழைப் பெற, சுகாதார அட்டையின் அடையாள எண்ணின் கடைசி 8 இலக்கங்களை உள்ளிட்டு, அதன் காலாவதி திகதி, தொற்றுநோயிலிருந்து குணமாகியது, கொரோனாவைரசு பரிசோதனை குறியீடுகள் மற்றும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளுக்காக பெறப்பட்ட அங்கீகார குறியீட்டை (AUTHCODE) உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Green pass எப்போது கிடைக்கும்? ஜூன் மாத இறுதியில் கிடைக்கும். 27 டிசம்பர் 2020 முதல் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான சான்றிதழ்கள் ஜூன் 28க்குள் தானாக உருவாக்கப்படும். 30 ஜூன் 2021 வரை, ஆய்வகங்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசிக்கு சான்றளிக்கும் ஆவணங்கள் செல்லுபடியாகும்.

சான்றிதழ் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்? – தடுப்பூசிக்கான சான்றிதழ்: இது முதலாவது ஊசியின் நிர்வாகத்திற்குப் பிறகு பதினைந்தாம் நாள் முதல் இரண்டாவது ஊசியின் திகதி வரை செல்லுபடியாகும். அந்த தருணத்திலிருந்து, சான்றிதழ் மேலும் 9 மாதங்களுக்கு செல்லுபடியாகும். – கொரோனாவைரசின் தொற்றிலிருந்து குணமாகியதற்கான சான்றிதழ்: தனிமைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு இது செல்லுபடியாகும்; – கொரோனாவைரசின் பரிசோதனை சான்றிதழ்: 48 மணி நேரம் செல்லுபடியாகும்.

சான்றிதழை ரத்து செய்ய முடியுமா? Covid-19 நோய்த்தொற்று ஏற்பட்டால் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

வெளிநாட்டில் பெறப்பட்ட தடுப்பூசிகள் செல்லுபடியாகுமா?ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வெளிநாடுகளில் பெற்றுக்கொண்டவர்கள், தேசிய எல்லை அதிகாரிகள் அல்லது இத்தாலியில் உள்ள தூதரகங்களில் தடுப்பூசி போடும் நாட்டின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டால் சான்றிதழ் பெற உரிமை உண்டு.

Green pass மூலம் முகமக்கவசத்தை அகற்ற முடியுமா? சுகாதார அமைச்சின் வலைத்தளம் விளக்குவது போல், தடுப்பூசி போட்டதால் தொற்றுநோய்க்கான அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டதாக உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், சுகாதார நடவடிக்கைகள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். வெளிப்புறங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டிய கடமை கைவிடப்பட்டாலும் கூட, உட்புறங்களில் நடைமுறையில் இருக்கும்.

Green pass உடன் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க முடியுமா? சான்றிதழ் இத்தாலிய பிரதேசத்தில் மட்டுமே செல்லுபடியாகும். எனவே வெளிநாடு செல்ல தனிப்பட்ட நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு