8 மார்ச், சர்வதேச பெண்கள் தினம்
1910 ஆண்டில் டென்மார்க்கில் உள்ள Copenaghen இல், 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள், உரிமை மாநாட்டை நடத்தினார்கள். பின்னர் 8 மார்ச் 1917இல், ரசிய பெண்கள், முதலாவது உலகப் போரை எதிர்த்து, Saint-Petersburg இல் அணிவகுத்து சென்றனர். 14 யூன் 1921இல் பொதுவுடைமைக் கட்சி (communist) பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு “மார்ச் 8” சர்வதேச தொழிலாளர் தினமாக அமைத்தது.
மார்ச் 1, 1925 இல், உருசியப் புரட்சியாளரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆன Lenin, அவரது மறைவுக்கு முன்னராக வெளியிட்ட ஒரு கட்டுரையில், 8 மார்ச்சை சர்வதேச மகளிர் தினமாக நினைவு கூர்ந்தார். பின்பு 1975ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் “8 மார்ச்” சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
இன்று பெண்கள் பெறும் சுதந்திரம், அவர்கள் முன்பு கடினமாகப் போராடிப் பெற்றது. ஆனாலும், இன்றும் உலகிலுள்ள சில நாடுகளில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக்கொண்டே இருக்கின்றனர்.
இன்றும் எங்கள் தாயகத்தில் பெண்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்: கொடூரமான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கியும், போரினில் காணாமல் போன தங்களது பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தேடிப் பல வருடங்களாக போராடியும் வருகிறார்கள் மற்றும் பெண் அடிமைத்தனம், சமத்துவமின்மை, பாலியல் தொல்லைகள், சீதனக்கொடுமை போன்றவற்றையும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், போராட்டம் ஆரம்பித்ததற்குப் பின், எங்கள் தலைவர் அவை எல்லாவற்றையும் நிறுத்தினார்.
பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விட்டு விலகி ஆயுதம் ஏந்தி தமக்காகவும் தங்கள் தேசத்திற்காகவும் போராடத் தொடங்கினர். மேலும், தமிழீழத்தில் தேசியத் தலைவரால் கட்டியெழுப்பப்பட்ட பல்வேறு துறைகளிலும் சிறந்துவிளங்கியது மட்டுமின்றி எமது தேசியப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு, தியாகம் மற்றும் அவர்களது வீரம் அளப்பெரியது.