கார்த்திகைப் பூ கையேந்தி எம் காவல் தெய்வங்களைப் பூசிப்போம் வாரீர்
மாவீரசெல்வங்களை
உலகத் தமிழினமே திரண்டு வந்து
ஒரு நிமிடம் தலை வணங்கும்
கல்லறைதனில் துயில் கொள்ளும்
உங்களுக்காய்
இப்புனிதநாளில்……….
வீரத்தின் விளை நிலங்கள்,
தியாகத்தின் பிரதிவிம்பங்கள் ,
விடுதலை வேள்வியின் தீச்சுடர்கள்,
தமிழீழ தாய் மண்ணின்
புனித வித்துக்கள் நீங்கள்
தமிழர் நெஞ்சங்களில்
நீங்கா இடம் பிடித்த
சுதந்திர சிற்பிகள் நீங்கள்
வருடத்தின் ஒரு நாள்
புனிதநாள் அதுதான்
கார்த்திகை 27.
உலக தமிழினமே மௌனிக்கும்
இந்நாளில்,
வீசும் காற்று கூட
ஒரு நிமிடம் விறைத்து நிற்கும்.
பொங்கி எழும் கடல் அலை
கூட தணிந்து நிற்கும் இப்புனிதநாளில்…..
பிரகாசிக்கும் நட்சந்திரங்களை
மிஞ்சிடும் தூய உங்களுக்காய்
ஏற்றப்படும் தீப சுடர்கள்,
கார்மேகம்கூட திரண்டு வந்து
எம் செல்வங்கள் உங்களுக்காய்
ஒரு கணம் கண்ணீர் சொரியும்
இப்புனித நாளில்.
ஈழ விடுதலையே இலக்கென கொண்டு
இல்லற சுகத்தை துறந்து
போர்களமே வாழ்வென கொண்டு
வித்தாகி கல்லறையிலே
உறங்கி கொண்டு இருப்பவர்கள்
நீங்கள்……..
கார்த்திகை பூவெடுத்து
துயிலும் இல்லம் சென்று
கல்லறை தொட்டு
வணங்கிடுவோம் உங்களை
இப்புனிதநாளில்…
கார்த்திகை பூ கை ஏய்ந்தி-எம்
காவல் தெய்வம்களை பூசிக்கும் நேரம்
தலைவனின் வழிநடந்த அக்கினிக் குஞ்சுகள் அல்லவா நீங்கள்
இன்று உங்கள் கல்லறைகள் தாய் மண்ணில் காடையர்களால் உருக்கிழந்து போய்கிடக்கு…ஆனால் எம் மனங்களில் என்றென்றும் வாழும் தெய்வங்களாய்ப் பூசிக்கின்றோம்.. ஒட்டுமொத்த உலகத்தமிழ் இனமும் கார்திகைப்பூ கரம் ஏந்தி தாயக நேர்காட்டியின் குறித்த மணியோசை முழங்க எங்கள் காவல் தெய்வங்களாக உறங்கும் உங்கள் கல்லறை மேனி தொட்டுப் பூசிக்கின்றோம்…
ஆண்ட பரம்பரை
மீண்டும் தமிழனை
அகிலம் புரிந்திடக்
களத்தினில் வந்தவரே
நிலத்தில் விழுந்தவர்
நிஜத்ததில் எம்மிடை
வாழும் தலைமுறையே
அறுவடை நாளினில்
புறப்பபடும் வீரனே
உயிர்த்தெழு இத்தினமே
உரிமைகள் காத்திட
உறவினைத் தளர்த்தியே
பெருமைகள் சேர்த்தவரே
தமிழனின் சரித்திரம்
விண்வரை ஓங்க நல்
மாண்புடை மாவீரனே
ஏழ்கடல் சூழினும்
ஈழம் தழைத்திட
இன்னுயிர் தந்தவரே
மாமலை வந்திடும்
வேளையில் உம்மிடை
சாதனை கொண்டவரே
தமிழுக்குத் தரணியில்
முகவரி எழுதிட
முனைப்புடன் வந்தவரே
வீறுடன் வேங்கையாய்
வித்தாகி எம்மண்ணில்
விருட்சமாய் நிற்பவரே
உலகத்து நாடுகள்
உன்னுடன் மோதியும்
பயனறற்றுப் போனதுவே
போரியலின் நெறி முறைகள் மிறியதால் பொல்லாத பொஸ்பரசை ஏவித்தான் வென்றாயா…
தட்டிக்கேட்க எந்த நாடும் வரவில்லை…முள்வேலிக்குள் முடங்கிப் போய்கிடக்கு எம் இனம்..
எழுந்துவா மாவீரா
இன்னும் ஒருமுறை
களத்தினில் நின்றிடவே
உங்கள் உயிரினைத்
தற்கொடை ஆக்கியே
தமிழுக்குள் வாழ்பவரே
உலகம் ஒருமுறை
விழிக்கும் வீரனே
துயில்கொள்வாய் மாவீரனே…
முள்ளிவாய்க்காலில் மௌனித்து நிக்கின்றோம்…அகிம்சையில் இளையோர் திசை எட்டும் முழங்க… நந்திக்கடலில் ஓடிய செங்குதிரிச் செந்நீரால் நாளை மலர்வாய் தமிழீழம்…அன்று மாவீரர் கனவு நனவாகும்….
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்