மக்கள் சந்திப்பு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இத்தாலியில் தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் எமது மக்களுடனான கலந்துரையாடல்கள் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள தேசம் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் இன அழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக முகம் கொடுக்கும் ஒரே தரப்பு இவர்களே. தயவுசெய்து இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை அறிவதோடு அழிக்கப்படும் எமது தேசத்தை ஒன்றிணைந்து காப்போம். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.