தடைகளைத் தாண்டி ஏற்றுகிறோம் தீபம்
தடை எதுபோடினும் தீபங்கள் எரியும்
என்னை என் மண்ணுக்குள் புதைப்பாய்
என் மண்ணை எங்கே புதைப்பாய்
மாவீர நாளுக்கு தடைவிதித்தாய்
அவர்களை மனங்களில் சுமக்கிறோம் எதைவிதப்பாய் வீதிகள் எங்கனம் நீ திரிவாய்
தமிழர் வீடுகளுக்கும் ஆள் விடுவாய்
அதிகாரம் உன் கையில் ஆடுகிறாய்
சதிகாரம் எமக்காய் போடுகிறாய்
பரிகாரம் நீ செய்யும் பாவத்திற்கில்லை
உன் பரம்பரை அனுபவிக்கும் பாவம் என்ற சொல்லை
விதி என்ற ஒன்று உண்டு என்று அறியாதே உன் மதியே உன் மதிதனை விதிவெல்லும் அதுதான் விதியே சதிகொண்டு தினம் எம்மை சாய்க்கும் உன் எண்ணம்
உன் கையில் பழிசேர்க்க இறைவன் தருவான்
பாவக்கிண்ணம் புவிமீது ஒருபோதும் கொடி அதிகாரம் நீளா இறைநீதிக்கு சமனான எங்கள் வரலாறு மாளா ஒருகாலம் எமக்காக இளம் தென்றல் வீசும்
அப்போது எம் வீரம் இந்த உலகமே பேசும்
பயத்தோடு வாழுகிறவன் சொல்லுகிற சொல்லே பயங்கர வாதியென்ற சொல்லே துளியேதும் பயமேதும் உனக்குஇல்லை என்றால் புலியது வருமென கிழியது எதற்க்கு
இனத்திலே நாம் சிறுபான்மை என்று பெரும்பான்மை உனக்கு பெருனினைப்பு உண்டு
உணர்வினில் நாங்கள் பெரும்பான்மை என்று அறியா நீ ஒரு சிறுபுலி நண்டு மறவுங்கள் மறவுங்கள் மாவீரரை என்று சொல்வதை மறந்திடு அதுவே நன்று
மறப்பதும் நினைப்பதும் எங்களது உரிமை அதைச் சொல்லிட உனக்கென்ன உரிமை
கண்ணீரோடு தீபமேற்றும் எங்களுக்கு நீயும் போட்டாய் தடை எங்கள் கண்ணீர் காவும் முகில்களுக்கும் நீயும் பிடிக்கவாய் போகிறாய் குடை
எங்கள் கண்ணீர் காவும் கார்த்திகை முகில்கள் மாவீர புரிசர்களின் மேனிகளை நனைக்கும்
தாய் மண்ணின் வண்ணக்கனவுகளோடே எம் உடல்களும் உயிர்களைப் பிரியலாம் தாய் மண்ணுக்காய் தம் உயிர் ஈந்தவர்கள் கனவுகள் மண்ணிலே பிரியாது தேசம் காத்த தெய்வங்களே தூங்குங்கள் தாய் மடியில் உங்கள் முகங்களைப் பார்போமே ஏற்றும் அந்த தீப ஒளியில்
கார்த்திகையில் கார்மேகம் பொழிகையிலே தாய் மண் பூத்துச்சிரித்து நிற்க்கும் எங்கள் காவல் தெய்வங்களை பூசிக்கும் நாள் வந்து நிற்க்கும்
மாவீரச் செல்வங்களின் கல்லறை தொட்டிலில் உறவுகளின் ஒப்பாரிக் குமுறலுடன் விழியில் மளமளவென நீர்த்தாரகையாய் சொரியும் நாள்
தமிழீழம் மலரும் எனப் பாடும் நாள் விதைத்த பயிர்கள் புதுப்பொழிவு நாள் தமிழர் குலம் குதிக்கும் நாள் இது சந்ததிக்காய் சாவை அணைத்த புண்ணிய புரிசர்கள்
புனிதர்களின் துயில் இல்லங்கள் விழிசொரியும் உறவுகளால் விளங்கும்
உள் உறங்கும் காவல் தெய்வங்களின் முனுகுரல் கேட்கும் பள்ளி கொள்போரை பார்ப்பதும் எம் விழி உணரும்
பூச்சொரிந்து நெய்விளக்கில் பொறியேற்றி் விழிசொரிந்து கார்த்திகையில் கலங்கி வெளியில் வர பூத்திருக்கும் நம்பிக்கைப்பூ
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்