இத்தாலி மேற்பிராந்தியத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023
இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நகரில் 03/12/2023 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது.
முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலிய மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. பின் 2008ம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் தின உரையின் சுருக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. அடுத்து அகவணக்கம் இடம்பெற்று ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க மாவீரர் குடும்பத்தினர் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.அடுத்து விடுதலை கானங்கள், திலீபன் தமிழ்ச் சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த தமிழ் தேசிய செயற்பாட்டளரின் சிறப்புரை இடம்பெற்றது. அடுத்து இத்தாலி தமிழ் இளையோர்களின் செயற்பாடுகள் தொடர்பான விவரிப்பு இடம்பெற்றது .
தொடர்ந்து திலீபன் தமிழ் சோலை மாணவர்கள் பங்கேற்ற பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது . அத்துடன் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டியில் இத்தாலியில் இருந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கூடியிருந்த அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் இறுதியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது.