தமிழர் விழா 2024 நாப்போலி
மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வரலாறு, அரசியல், குமுகாயவியல் முதலியவற்றைப் முரசொலிப்பதாக அமைவதே விழாக்கள் ஆகும். அந்தவகையில் கடந்த 13/01/2024 சனிக்கிழமை அன்று நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலையில் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து தமிழர் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாக்களினை ஒருங்கமைக்க முடியாமல் சில ஆண்டுகள் கடந்திருந்தாலும் மீண்டும் பிரமாண்டமாக இந்த ஆண்டில் நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலையும் நாப்போலி வாழ் தமிழ் உறவுகளும் இணைந்து சிறப்புற அனைவரையும் தமிழர் விழாவில் ஒன்றிணைத்திருக்கிறனர். நிகழ்வானது அழைக்கப்பட்ட பிரதம விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றியதுடன் ஆரம்பமாகி நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம்,பேச்சு,கவிதை என பல நிகழ்வுகளும் அரங்கேறி ஆண்டிறிதித் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலுடனான மதிப்பளிப்பைத் தொடர்ந்து மண்டபம் நிறைந்த உறவுகளுடனும் நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறியது மகிழ்ச்சியே.
அதுமட்டுமல்லாமல் இத்தாலி நாட்டவர்களே எம் கலாச்சாரம் பண்பாடுகளை பார்த்தும், கேட்டும் வியந்து பாராட்டியுள்ளனர். இது போன்று வருங்காலங்களிலும் சிறப்பாக தமிழர் சார் விழாக்கள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பதே எம் அனைவரதும் எண்ணம்.