தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 , இத்தாலி
தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாளான 2009 மே 18 நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து சிங்கள இனவாத அரசுகளின் இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழர் தாயகத்தை சிதைக்கும் செயற்பாடுகள் மிக வேகமாக நடந்தேறிய வண்ணம் உள்ளன. இன அழிப்பில் இருந்து எமது மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு புலத்தில் வாழும் எம்மிடமே உள்ளது. சிங்கள இனவெறி அரசால் உலக போர்விதிகளை மீறி படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களுக்கான நீதிக்காகவும், தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும் தொடர்ந்து தமிழராய் ஒன்றிணைந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். இத்தாலியின் முக்கிய நகரங்களில் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த எமது மாவீரர்களுக்கும், உறுதியோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று மானச்சாவடைந்த மக்களுக்கும் வணக்கம் செலுத்துவதோடு எமக்கான நீதிக்கு ஓங்கி குரல் கொடுப்போம்.