இத்தாலி வாழ் ஈழத்தமிழரின் உலக சாதனை
பராஒலிம்பிக் 2024 தடகள வரலாற்றில் (Stadt de France) நிலைத்திருக்கும் உலக சாதனையை இத்தாலிய வீரர் செல்வன் ரிஜீவன் கணேசமூர்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
F52 வட்டு எறிதலில் தனது முதல் பராஒலிலிம்பிக் பங்கேற்பில், போட்டியில் தொடர்ந்து மூன்று முறை புதிய உலக சாதனையை படைத்தார்.நான்காவது எறிதலில் 27.06 மீட்டர் தூரம் எறிந்து பராஒலிம்பிக் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
F52 வட்டு வீச்சு என்பது மாற்றுத் திறனாளிகளிற்கான ஒரு போட்டியாகும், குறிப்பாக கால்கள் மற்றும் உடல் தசைகள் செயலற்றவர்களுக்கு இந்த வகை போட்டிகள் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்த நிலையில் வட்டு எறிகிறார்கள். இது பராஒலிம்பிக் போட்டிகளில் ஒன்று ஆகும்.
இத்தாலி ரோம் நகரில் 1999 இல் பிறந்த இவர் 2017 இல் உடல் நலப் பாதிப்புக்கு உள்ள்ளாகி ,2019 இல் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். எனினும் தனது விடாமுயற்சியால் A.S. Anthropos Civitanova Marche உடன் இணைந்து கடும் பயிற்சிகள் பெற்றுக் கொண்டு இன்று முதன்மையான வீரர் ஆகத் திகழ்கின்றார் .
பராஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட யாழ்ப்பாணத் தமிழரான 25 வயதுடைய செல்வன் ரிஜீவன் கணேசமூர்த்தி தமிழ்ச் சமூகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பராஒலிம்பிக் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி, கண்ணியமான இடங்களைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் திறமையை நிரூபித்து, பலருக்கும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்.அவருக்கு இத்தாலி வாழ் தமிழர்கள் சார்பில் பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
sources: olympics.com / paralympics.org / comitatoitalianoparalimpico.it