இத்தாலி போலோனியா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வுகள்.
இத்தாலி போலோனியா நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தியாக தீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து லெப் கேணல் திலீபன் அவர்களுடைய உருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. வருகைதந்திருந்த மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி தங்கள் வணக்கங்களைச் செலுத்திய பின்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், அபிநய நடனங்கள் இடம்பெற்றது .போலோனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போலோனியா ,ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களும்,பெற்றோர்களும்,பொதுமக்களும் இணைந்து பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் தேசியக் கொடி கையளிக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்” என்ற உறுதி மொழியுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.