இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு கிடைக்கப் பெற்ற உங்கள் அன்பளிப்பு.

அனைவருக்கும் வணக்கம்,
இத்தாலி தமிழ் கல்விச்சேவைக்கு 5×1000 ஊடாக எம் தமிழ் உறவுகளும், இத்தாலிய மற்றும் ஏனைய நண்பர்களும் வழங்கிய பங்களிப்பால் 27/12/2024 அன்று 1407,00 யூரோக்கள் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை வங்கிக் கணக்கிற்கு கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதுடன், தங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்புக்கான எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்படி அன்பளிப்புத் தொகையானது இத்தாலிய சட்ட வரைபுகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் அவை தொடர்பான விபரங்களையும் அறியத் தருவோம்.

தங்களுடைய நண்பர்களுக்கும் இந்தத் தகவலை அறியத்தந்து அடுத்து வரப்போகும் ஒவ்வொரு ஆண்டும் 5×1000 தொடர்பான உதவியையும், ஒத்துழைப்பையும் மீண்டும் அனைவரிடமும் வேண்டிநிற்கின்றோம்.
நன்றி.

அனைவருக்கும் 2025ம் ஆண்டு சிறப்பானதாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை.
30/12/2024

உங்கள் கவனத்திற்கு