மதங்களைக் கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் தனிப்பெரும் விழாவான தமிழர் திருநாளாளில் தைமகளை வரவேற்று ஜெனோவா வாழ் ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து (19/01/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11:00மணிக்கு PARROCCHIA MOLASSANA என்னும் இடத்தில் உள்ள தேவாலய மண்டபத்தில் பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கி மகிழ்ந்த வண்ணம் தமிழர் வாழ்வும் மரபுத் திங்களும் என்னும் சிற்றுரையைத் தொடர்ந்து சின்னஞ்சிறு மழலைகள் ஆத்திசூடி, திருக்குறள்களை மனனம் செய்து கொஞ்சு தமிழில் சொல்லிச் செல்ல , ஜெனோவா திலீபன் கலைக்கூட மாணவர்களின் நடனங்களைத் தொடர்ந்து பல் திறப்புலமை நிகழ்ச்சிகளுடன் நிறைந்த மண்டபத்தில் உறவுகளுடன் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. உளம்நெகிழ்ந்த மகிழ்ச்சியுடன் அதிஷ்ர லாபச் சீட்டுப் பரிசுகளைப் பெற்ற வண்ணம் தமிழர் விழா இனிதே நிறைவு பெற்றன அவற்றின் சில பதிவுகள்…

உங்கள் கவனத்திற்கு