இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்ட தமிழர் விழா 2025
இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர் விழாவானது ஞாயிற்றுக்கிழமை (19/01/2025) அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
கலை மற்றும் கலாச்சாரம் ஒரு இனத்தினை பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். புலம்பெயர் தேசமதில் பிறந்தாலும் எமது மூதாதையரிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்குப் பாடுபடுவது நம் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து, நம் தேசியத்தலைமையால் கட்டமைத்துக் கொடுக்கப்பட்ட ஒழுக்க நெறியின்படி தமிழர் விழாவானது மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து பரதம், புஸ்பாஞ்சலி, கரகாட்டம், காவடியாட்டம், கவியரங்கம், நாடகம், விவசாயத்தின் பெருமையினை வெளிப்படுத்தும் நடனங்கள் மற்றும் தமிழர் விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற நிகழ்வுகள் என இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்வுகளைச் சிறப்புறத்தந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு தேசியத் தலைவரது சிந்தனைகளுக்கு ஏற்ப இளையோர் அமைப்பினராகிய நாம் எமது விடுதலைப் பயணத்தையும், எமது நாட்டின் பண்பாடுகளையும், கலை கலாச்சார விழுமியங்களையும், அழிய விடாமல் பாதுகாத்துக் கொண்டு செல்வதே இவ் விழாக்களின் முக்கிய நோக்கமாக உள்ளது என்பதை அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.