இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையால் உறவை வளர்ப்போம் திட்டத்தின் ஊடாக தமிழர் தாயகத்தில் கல்விக்கான உதவி .

இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலை நிர்வாகத்தினர் தாயகத்தில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் மாதாந்த கல்வித் தேவைக்கான நிதியை வழங்கும் திட்டத்திற்கு உதவ முன்வந்து ,முதற்கட்டமாக
செப்டம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டுமுதல் 18 மாதங்களுக்கு மாதாந்த உதவித்தொகை இத்தாலி தாயக நலன் பிரிவிற்கூடாக வழங்கப்பட்டு வருகிறது .

மேற்படி உதவியைப் பெற்று வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையானவர் முன்னை நாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஆவர். இவர் விபத்து ஒன்றில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து மார்கழி மாதம் அமரத்துவம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் மனைவி மற்றும் 5 பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுடைய உதவி கோரலானது அனைத்துலகத் தாயக நலன் பிரிவூடாக பரிசீலிக்கப்பட்டு எமக்கு கிடைக்கப்பெற்றது.

இத்திட்டத்தின் ஊடாக குறித்த பிள்ளைகள் அவர்களது கல்வியில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கைப் பாதையை வளப்படுத்த பேருதவியாக அமையும் என்று பிள்ளைகளின் தாயார் போலோனியா திலீபன் தமிழ்ச்சோலை நிர்வாகத்தினருக்கு நன்றி கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு