இத்தாலி வாழ் ஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரச தூதரகத்தின் சதி வலையில்?
எதிர் வரும் பெப்ரவரி 4ம் நாள் இத்தாலி நாட்டில் இயங்கும் சிறீலங்கா தூதரகங்கள் நடாத்தும் சுதந்திரதின களியாட்ட நிகழ்வுகளில் ஈழத்தமிழ் மக்களையும் உள்வாங்கி சர்வதேச நாடுகள் முன்பு ஈழத்தமிழர்கள் தாயகத்தில் இயல்பாகவும் ,சுதந்திரமாகவும் சம உரிமையுடன் வாழ்கின்றனர் என காட்டும் நோக்கில் இத்தாலி ஈழத்தமிழர்கள் மத்தியில் இயங்கி வரும் சிறிய “தமிழ் அமைப்புக்கள்” மற்றும் குறிப்பாக தமிழ் மத அமைப்புகளான இந்து சமய அமைப்புகள், கிறித்தவ அமைப்புக்கள் என்பவற்றை குறிவைத்தே இச் சதிமுயற்சி நடந்து வருகின்றன.
ஈழத்தமிழ் மக்களின் கரிநாளான பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் தமிழ் தேசிய அமைப்புக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் எனவும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளான தன்னாட்சி, சமஉரிமை, இறையாண்மை மீளத்தர வேண்டியுமே இப்போராட்டங்கள் இடம் பெறவுள்ளது .
இப்போராட்டங்ளை மழுங்கடிக்கும் நோக்குடனும் மற்றும்
பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள சிறீலங்கா அரசு மேற்குலகின் உதவிகளையும் பெறவே இச் சதிவலையில் “இத்தாலி ஈழத்தமிழர்களை” மட்டுமல்லாது தனது நன்கு திட்டமிடப்பட்ட வலைப்பின்னலூடாக அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் குறிவைத்துள்ளது.எனவே அனைத்து மக்களையும் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளையும் விழிப்பாக இருக்க வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி
இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்கள்