வீட்டில் முடங்கியிருத்தல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கடினமான தருணமாகும். பள்ளிக்கு செல்ல முடியாது, நண்பர்களை சந்திக்க முடியாது வீட்டிலேயே எந்நேரமும் தங்கியிருக்க வேண்டும். இந்தக் கடினமான சூழ்நிலையை நாம் நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். பயத்தினால் சோர்வடையவேண்டியதில்லை.
இந்த தொற்று நோய் எம்மை உடல்ரீதியாக தனிமைப்படுத்தினாலும் எம் நம்பிக்கையையும் எம் குழந்தைகளின் ஆற்றலையும் ஒருபோதும் குறைக்கவில்லை. நேர்மறை எண்ணங்களும் வண்ணமயமான செய்திகளும் ஒளியூட்டும் நம்பிக்கையுமே இம்முடக்கத்திற்குப்பிறகான ஒரு அழகிய வாழ்க்கையை நினைவூட்டும். அந்தவகையில் உங்கள் குழந்தைகளின் மனநிலையை கருத்திற்கொண்டு நாம் பின்வரும் ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
வரைதல் என்பது மனநிலை வெளிப்பாட்டின் ஒரு வடிவம். இதற்கமைவாக “இதுவும் கடந்து போகும்” என்ற தலைப்பிற்கிணங்க உங்கள் சிறார்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு வண்ணமயமான வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்த எத்தனிக்கின்றோம்.