இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2024

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரகாவியமான
முதல் பெண் 2ம் லெப் மாலதி அவர்களின் 37 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
ஜெனோவா மாநகரில்(13/10/2024) ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிக்கு ஆரம்பமானது.

பிரதான ஈகைச்சுடரை
இத்தாலி கல்விச்சேவைப் பொறுப்பாளர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து 2ம் லெப் மாலதி உருவப்படத்திற்கு இத்தாலி மகளிர் அமைப்பு உறுப்பினர்களான திருமதி கேசவன் அகலியா, திருமதி நிலோஜன் பிரியங்கா
ஆகியோர் மலர்மாலை அணிவித்தார்கள்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கமும், சுடர் வணக்கமும் இடம்பெற்றது.

தமிழீழ வரலாற்றில் முதற் பெண் வித்தாய் மலர்ந்த மாலதி அவர்களின் தடம் பதித்த வாழ்க்கைப் பயணத்தின் சிறு துளி தொகுப்பை திருமதி கேசவன் அகலியா வழங்கிச் சென்றார்.அதனைத் தொடர்ந்து எழுச்சிப் பாடல்கள் நினைவுக் கவிதைகள்,நினைவுரைகள் என்பனவும் இடம்பெற்றன .

இத்தாலி மகளிர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நினைவு எழுச்சிநாள் நிகழ்வில் ஜெனோவா வாழ் தமிழ் மக்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் நிறைந்த மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு