தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவேந்தல் 2024 இத்தாலி.
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள். ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள் நவம்பர் 27 இந்நாள் ஜெனோவா மாநகரில் (27/11/2024) புதன்கிழமை Salita Terrapieni 3r 16137 Genova என்னும் இடத்தில் உள்ள மண்டபத்தில் 13:00 மணிக்கு ஆரம்பமாகி 13:35 மணிக்கு முதன்மைச் சுடரேற்றலுடன் அகவணக்கம்,மலர் வணக்கம்,சுடர் வணக்கத்துடன் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நிறைந்த மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. அவற்றின் சில பதிவுகள்…..